ஒளிப்பதிவாளர் பிரியன் : நினைவாஞ்சலி

Nov 12 2017

Views: 3557

கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள் தான் தமிழ் சினிமாவை ஒளிரச் செய்தார்கள். அந்த வகையில் தென்னிந்திய திரைப்படத் துறையில் சில குறிப்பிடும்படியான, புகழ்பெற்ற பெரிய  படங்களில் திறம்பட அரிய வகை ஒளிப்பதிவு நுட்பங்களை கையாண்ட சினிமா ஒளிப்பதிவுத் தொழில் வல்லுநர்களுள் ஒருவர் தான் நமது அன்பான திரு.பிரியன் அவர்கள்.

பிரியன் அவர்கள் விருதுநகரில் பிறந்தவர். K. பாலாஜியின்  சுஜாதா வெளிப்புற படப்பிடிப்பு யூனிட்டில் கேமரா உதவியாளராக பணிபுரிந்தார். ஒளிப்பதிவின் மீதான பிரியத்தாலும், தனது தனித்திறமைகளை வெளிக் கொணரும் விதமாக “புதிய முகம்” படத்தில் ஸ்டில் காமிராமன் ஆக முதன் முதலாக தனித்துவம் பெற்றார், பின்னர் 1994 ஆம் ஆண்டில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சித் தொடர்  ‘ரேவதி’ க்காக காமிரா மேனாக பணிபுரிந்தார்.

பின்னர் அவர்  ராஜீவ் மேனன் அவர்களுடன் இணைந்தார். அதன் பின்பு திரைப்படங்களில் தனித்து ஒளிப்பதிவு செய்யும் வண்ணம் ஒளிப்பதிவாளர் ஆனார். ஒளிப்பதிவு இயக்குநர் (DOP) ஆன பிறகு அவரது ஆரம்ப படைப்புகள் “வா வா வசந்தமே, தொட்டாசிணுங்கி”.

1997 ல் இயக்குனர் திரு. சேரனின் அவர்களின் இயக்கத்தில். திரு.பிரியன் அவர்களின் சிறந்த ஒளிப்பதிவில் “பொற்காலம்” சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது, அதில் பலமான சமூக செய்தி இருந்தது. பிரியன் அவர்களின் இரசனைக்குள்ளான தேர்ந்த ஒளிப்பதிவானது “கிராமங்களின் உயிர்த்துவத்தையும், கிராமத்து மண்ணின் நிறம் மாறாமல் காட்சிகள் வழியே அள்ளி தந்திருந்தார்”.

சேரன் அவர்களிடம் இணைந்து, “தேசிய கீதம், வெற்றிக் கொடிகட்டு (தேசிய விருதினை வென்ற படம்)” போன்ற பிரபலமான திரைப்படங்களில் சிறந்த அந்த கூட்டணியில் வெற்றிகண்டார். பின்னர் அவர் பல்வேறு பிரபலமான திரைப்பட இயக்குநர்களுடன் பணிபுரிந்தார்.

இயக்குனர் ஹரி உடன் இணைந்து ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினார், மேலும் இவர்கள் கிட்டத்தட்ட 14 வெற்றித் திரைப்படங்களில் இணைந்தே பணிபுரிந்தார்கள். அவரது சமீபத்திய திரைப்படமான “சிங்கம்-3” இது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது, 360 டிகிரி VR காட்சிகளைப் போன்ற சில மாறும் காட்சியமைப்புகளைக் கொண்டிருந்தது. ஒரு ஏரியல் சினிமாட்டோகிராஃபி காட்சியில், தொடர்ச்சியான நீளமான நகரத் தோற்றத்தில் துவங்கி, பின்னர் ஒரு போலீஸ் ஸ்டேஷன் சாலையில் கடந்து, உட்புறத் தூண்களில் நுழைகிறது. அனைத்தும் ஒற்றை ஷாட் ஒன்றை அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருந்தார். டிரோன், வெளிப்புறம் மற்றும் உட்புற லைட்டிங் அமைப்புகள் அனைத்து நிலைகளிலும் மாறிவிடாமலும், தனித்து தெரியாமல் சரியாக பொருந்தும் விதமாகவும் தனது ஒளிப்பதிவின் வழியே வெளிப்படுத்தி இருந்தார்.

பிரியன் அவர்கள், SICA-வின் துணைத் தலைவராக பணியாற்றினார்.

PC ஸ்ரீராம், SICA-வின் தலைவர்  பிரியன் அவர்களைப் பற்றி அவரது சிந்தனையில் தோன்றிய சில வார்த்தைகள்,

“SICA-வின் நலனுக்கான உங்களுடைய அக்கறையும், உழைப்பும் எதிர்காலத்தில் எல்லோராலும், எப்பொழுதும் ஒவ்வொருவராலும் நினைவில் கொள்ளப்படும் . நீங்கள் எப்பொழுதும் எனக்கும் மற்றும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மனிதநேயத்தையும், அன்பையும் வெளிப்படுத்துகிற ஒரு நபராக அறியப்படுவீர்கள், பிரியன் அவர்களின் பங்களிப்பு கிடைதததில் SICA-வுக்கு பெருமை.’’

2017-ஆம் ஆண்டு, நவம்பர் 9-ம் தேதி மாரடைப்பு காரணமாக நாங்கள் அவரை இழந்தோம்.

SICA, அவரது சிறந்த ஒளிப்பதிவு தொழில்நுட்ப யுக்திகளையும், அவரது அனைத்து சாதனைகளை இதன் மூலம் நினைவு கூறுகிறது.

 பிரியன் அவர்கள் ஒளிப்பதிவில் வெளிவந்த திரைப்படங்களின் பட்டியல்:

  • வா வா வசந்தமே- 1992
  • தொட்டாசிணுங்கி- 1995
  • பொற்காலம்- 1997
  • தேசிய கீதம்- 1998
  • வெற்றிக் கொடிகட்டு- 2000
  • ஆனந்த பூங்காற்றே- 2000
  • தெனாலி- 2000
  • ஸ்டார்- 2001
  • மஜ்னு- 2001
  • தமிழ்- 2002
  • பாலா- 2002
  • சாமி- 2003
  • கோவில்- 2004
  • அருள்- 2004
  • உதயா- 2004
  • ஐயா- 2005
  • ஆறு-2005
  • வல்லவன்-2006
  • திமிரு- 2006
  • தாமிரபரணி-2007
  • வேல்-2007
  • சேவல்-2008
  • தோரணை-2009
  • சிங்கம்-2010
  • வேலாயுதம்-2011
  • சிங்கம் II-2013
  • பூஜை-2014
  • சிங்கம் III-2017
  • சாமி II – Yet to be released..

-மொழியாக்கம்

இளவரசன் தேவராஜன் (SICA உறுப்பினர்)

x
^