A. ஆரோக்கிய தாஸ்

Oct 30 2021

Views: 647

திரு.A.ஆரோக்கிய தாஸ் (எ) அருள் தாஸ் அவர்கள் திரைப்பட உலகில் ஒளிப்பதிவாளர், நடிகர் என இரு துறைகளிலும் பயணித்து வருகிறார். இவரது திரைப்பயணம் 1990-களில் தொடங்கியது. இவர் ஒளிப்பதிவாளர் திரு.மாயா அவர்களிடம் ‘ரகசிய போலீஸ்’ திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகவும், பிறகு அவரிடமே பல தொலைக்காட்சித் தொடர்களில் உதவியாளராகவும் பணியாற்றினார். அதன் பிறகு ஒளிப்பதிவாளர் திரு.U.K. செந்தில்குமார் அவர்களிடம் “அருணாச்சலம்”, “ஜானகிராமன்”, “நாம் இருவர் நமக்கு இருவர்”, போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பிறகு ஒளிப்பதிவாளர் திரு. ராமநாத் ஷெட்டி அவர்களிடம், “என் புருஷன் குழந்தை மாதிரி”, “கார்மேகம்”, “அலாவுதீன்”,“அன்பே அன்பே”,“பழசிராஜா,” (மலையாளம்) போன்ற திரைப்படங்களிலும், மற்றும் பல படங்களில் கூடுதல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றினார்.

“ஒரு பொண்ணு ஒரு பையன்” படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து ‘அ.ஆ.இ.ஈ’ மற்றும் ‘பதினாறு’ ஆகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதன் பிறகு இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் இயக்கிய “நான் மகான் அல்ல” திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

திரு. A. ஆரோக்கிய தாஸ் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த படங்கள்

1. ஒரு பொண்ணு ஒரு பையன்

2. அ. ஆ. இ. ஈ

3. பதினாறு

x
^