Dec 12 2020

Views: 3017

ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ராய்!

ஸீக்காவின் மிக மூத்த உறுப்பினரும் பழம்பெரும் ஒளிப்பதிவாளருமான திரு. விஸ்வநாத் ராய் அவர்கள் நேற்று (11-12-2020) தன் தொண்ணூறாவது வயதில் காலமானார்.

விஸ்வநாத் ராய்

1970களில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ராய். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய முக்கியமான படைப்புகளில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

1976ம் ஆண்டு ஏ.சி.திருலோகசந்தரின் பத்ரகாளி திரைப்படம் மர்ம சம்பவங்கள் நிறைந்த குடும்பச்சித்திரமாக உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு இவர் அமைத்த லைட் & ஷாடோ லைட்டிங் முறை படத்தின் விறுவிறுப்பிற்கு வலு சேர்த்தது. அத்திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் கதாநாயகி ராணிசந்திரா விமான விபத்தில் இறந்துவிட்டார்.

படத்தில் மீதமிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சிக்கு அதே உடலமைப்பு கொண்ட வேறொரு நடிகையை வைத்து படமாக்கினார் விஸ்வநாத் ராய். இவரது ஒளியமைப்பும், காட்சிகளை கம்போஸ் செய்தவிதமும் தத்ரூபமாக ராணி சந்திரா நடித்தது போலவே பார்வையாளர்கள் உணரும்படி படமாக்கினார்.

தேர்ந்தெடுத்த திரைப்படங்களின் பட்டியல்

  • எங்கிருந்தோ வந்தாள் (1970)
  • பாரத விலாஸ் (1973)
  • தீர்க்க சுமங்கலி (1974)
  • அவன்தான் மனிதன் (1975)
  • அன்பே ஆருயிரே (1975)
  • டாக்டர். சிவா (1975)
  • பத்ரகாளி (1976)

அவரது ஒளிப்பதிவில் வெளிவந்த படைப்புகளும் அவரது சாதனைகளும் நம் அனைவருக்கும் என்றும் உத்வேகத்தை அளித்துக் கொண்டிருக்கும்!

CJ Rajkumar

Author/Cinematographer

x
^