அசோக் குமார்

திரு. அசோக் குமார், உத்திரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பிறந்தவர். தகப்பனார் கேதார்நாத் அகர்வால் ஒரு இந்திக் கவிஞர். சிறு வயதிலிருந்தே சினிமாவின் மேல் அவருக்கு ஒரு நாட்டமிருந்தது. சினிமாத்துறைக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத அவர் குடும்பத்தார், முதலில் அனுமதி தர மறுத்தனர். ஆனால், பின்பு பம்பாயைத் தவிர்த்து, சென்னைக்குப் போக சம்மதித்தனர். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் புகைப்படப் பட்டயக்கல்வி கற்றவர், பின்பு, சென்னை அடையாரிலுள்ள திரைப்படக் கல்லூரியில் இணைந்து ஒளிப்பதிவு படித்தார். அங்கே அவர் சத்யஜித் ரேயின் படங்கள், உட்பட பல சர்வதேச படங்களை பார்த்தார்.

பிறகு முதல் முறையாக, 1969ல் ஜன்மபூமி எனும் மலையாளப் படத்தில் வேலை பார்த்தார். அதன் தயாரிப்பாளர்கள் அவரோடு கல்லூரியில் படித்த நண்பர்கள். அவர்களது கல்லூரி ஆசிரியர் ஜான் சங்கரலிங்கம்தான் அதன் இயக்குனர். படப்பிடிப்பிற்காகவும், விநியோகத்துக்காகவும் அவர் பண உதவியும் செய்தார். அந்தப் படம் மக்கள் இடப்பெயர்ச்சி மற்றும் மதநல்லிணக்கம் போன்ற செம்பொருளை ஆராய்ச்சி செய்யும் வகையில் அமைந்தது. சிறந்த படத்திற்கான நர்கீஸ் தத் விருது மற்றும் கேரள அரசின் விருதை பெற்றது.

அதன் பின், பி.என்.மேனன், ராமு கரித், பரதன் போன்ற முக்கியமான மலையாள இயக்குனர்களோடு பணியாற்றினார். மேலும் 1973ல் ஸ்வப்னம், 1977ல் டாக்சி டிரைவர் போன்ற மலையாள படங்களுக்காக கேரள மாநில விருதுகளைப் பெற்றார். 1978ல் இயக்குனர் மகேந்திரன் முள்ளும் மலரும் படத்திற்காக ஒளிப்பதிவாளர், ராம்சந்திரபாபுவை அணுகியபோது, அவரால் முடியாத சூழலில், அவரால் பரிந்துரைக்கப்பட்டவர் அசோக்குமார். ஆனால், கமலஹாசனின் பரிந்துரையால் அந்த வாய்ப்பு பாலுமகேந்திராவுக்கு போய்விட்டது. குமாரின் மலையாளப்படங்களை பார்த்து அவரின் கோணங்களையும், ஒளியமைப்பையும் ரசித்த மகேந்திரன், உதிரிப்பூக்கள் படத்திற்காக மீண்டும் அசோக்குமாரை அணுகினார், ஏனென்றால், பாலுமகேந்திரா அப்போது அழியாத கோலங்கள் படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இம்முறை அவர் அதை ஏற்று முதன்முதலாக தமிழுக்கு வந்தார். இதன் பின் அவர் பல தமிழ் படங்களில் பணியாற்றினார்.

மகேந்திரனுடன் ஜானி – 1980, நெஞ்சத்தை கிள்ளாதே – 1980, நண்டு – 1981 மற்றும் மெட்டி -1982 உட்பட 9 படங்களில் பணிபுரிந்திருக்கிறார். நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்காக அசோக்குமாருக்கு தேசிய மற்றும் மாநில அளவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகள் கிடைத்தன.

1980க்குப்பின் குமார் வேலை பார்த்த படங்கள் – மை டியர் குட்டி சாத்தான் (1984 இந்தியாவின் முதல் 3டி படம்), மற்றும் இந்திப் படங்களான – காமாக்னி (1987), பவந்தர் (2000) கெஹ்தா ஹை தில் பார் பார்(2002) போன்றவை. பவந்தர் படம் வி. சாந்தாராம் விருது மற்றும் பல சர்வதேச விருதுகளைப் பெற்றதாகும்.

43வது தேசிய சினிமா விருதுகளுக்கு நடுவராக நியமிக்கப்பட்டார். பி.எஸ். நிவாஸ், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பி. ஆர். விஜயலக்ஷ்மி போன்றவர்கள் அவருக்கு உதவியாளராக வேலை செய்திருக்கிறார்கள். பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீ்ராம், பாபு, வேணு போன்றோர் அவரைத் தமது முன்னோடி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பெற்ற விருதுகள்

சிறந்த படப்பிடிப்பாளருக்கான தேசிய விருது
சிறந்த படப்பிடிப்பாளருக்கான கேரள மாநில விருது
சிறந்த படப்பிடிப்பாளருக்கான தமிழ்நாடு மாநில விருது
சிறந்த படப்பிடிப்பாளருக்கான நந்தி விருது

பணிபுரிந்த திரைப்படங்கள்

ஜென்மபூமி (1969)
எழுதாத கதா (1970)
அவலல்பம் வைகிப்போயி (1971)
குட்டிஎடத்தை (1971)
மாப்புசாக்ஷி972)
கலம் மரந்தி (1972)
செம்பருத்திhembarathi (1972)
சாயம் (1973)
தர்ஷனம் (1973)
மழக்காரு (1973)
காயத்ரி (1973)
மனுஷ்யபுத்ரன் (1973)
ஸ்வப்னம் (1973)
காமினி (1974)
மோகம் (1974)
ஒடக்குழல் (1975)
நுரையும் பதயும் (1977)
டாக்சி டிரைவர் (1977)
குருவாயூர் கேசவன் (1977)
ஆரவம் (1978)
ஞான் ஞான் மாத்ரம் (1978)
சத்திரத்தில் ஒரு ராத்திரி (1978)
இ கானம் மறக்குமோ (1978)
இரண்டு ஜன்மம் (1978)
ஜயிக்கானய் ஜனிசவன்Jayikkaanaay Janichavan (1978)
அனியரAniyara (1978)
உதிரிப்பூக்கள்Uthiripookkal (1979)
தகரThakara (1979)
லவ்லிLovely (1979)
உல்லாச் பறவைகள்Ullasa Paravaigal (1980)
பூட்டாத பூட்டுக்கள்Pootaadha Pootukkal (1980)
காளிKaali (1980)
லாரிLorry (1980)
ஜானிJohnny (1980)
நெஞ்த்தை கிள்ளாதேNenjathai Killathe (1980)
மஞ்ஜில் விரிஞ்ச பூக்கள்Manjil Virinja Pookkal (1980)
ஸ்வாதுSwathu (1980)
மலன்காட்டுMalankaattu (1980)
நண்டு (1981)
மெட்டி (1982)
அழகிய் கண்ணே (1982)
டார்லிங், டார்லிங், டார்லிங் (1982)
நவம்பெரிந்டெ நஷ்டம் (1982)
தடாகம் (1982)
கைகெயி( 1983)
முந்தானை முடிச்சு (1983)
எண்டே மமட்டிக்குட்டியம்மக்கு (1983)
மை டியர் குட்டிசாத்தான் (1984)
பரன்னு பரன்னு பரன்னு (1984)
கல்கி (1984)
நொக்கெததூரத்து கன்னும் நட்டு (1984)
கை கொடுத்த கை (1984)
பிள்ளை நிலா (1985)
கன்னி ராசி (1985)
தென்றலே என்னை தொடு (1985)
பாரு பாரு பட்டணம் பாரு (1986)
ரிதுபேதம் (1987)
அன்று பெய்த மழையில் (1989)
ஜீவா (1988)
டெய்சி (1988)
வெற்றி விழா (1989)
ஒருக்கம் (1990)
மை டியர் மார்த்தாண்டன் (1990)
நடிகன் (1990)
வசந்தகால பறவை (1991)
சுரியன் (1992)
மகுடம் (1992)
மன்னன் (1992)
ஐ லவ் இந்தியா (1993)
இந்து (1994)
கட்டுமரகாரன் (1995)
ஜீன்ஸ் (1998)
மலபார் போலீஸ் (1999)
பவந்தர் (2000)
காம சூத்திர கதைகள் – The Perfumed Garden (2000)
ஸ்ரீ் சாயி மஹிமா (2000)
கெஹதா ஹை தில் பார் பார் (2002)
கோவில்பட்டி வீரலக்ஷ்மி (2003)

x
^