மார்க்கஸ் பார்ட்லே

திரு. மார்க்கஸ் பார்ட்லே (1917 – 14 March 1993) பல இந்திய படங்களின் வெற்றிக்கு காரணகர்த்தாவாக இருந்த ஒரு ஆங்கிலோ-இந்திய ஒளிப்பதிவாளராவார். பள்ளிக்கூட காலத்திலேயே புகைப்படக்கலையில் ஆர்வமிக்க மார்க்கஸ், 1935லில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் புகைப்படக்காரராக சேர்ந்தார். அதன் பின் பிரிடிஷ் மூவிடோன் மூலமாக சினிமாத் துறைக்குள் பிரவேசித்தார். உலகப்புகழ் பெற்ற மாயாபஜார், செம்மீன் போன்ற காவியங்களின் ஒளிப்பதிவாளர் இவர்தான்.

சென்னைக்கு வந்து, பிரகதி ஸ்டுடியோவில் பணியில் இணைந்த அவர், 1945லில் முதன்முதலாக ‘ஸ்வர்க சீமா’ படத்தில் பணிப்புரிந்தார். கருப்பு- வெள்ளைப் படங்களில் அவருக்கிருந்த அசாத்திய திறமையை வெளிப்படுத்திய படம் அது. அதன் மூலமாக அவருக்கு பி என் ரெட்டி, கே வி ரெட்டி மற்றும் நாகி ரெட்டியின் நட்பு கிடைத்தது. ஒன்றின் பின் ஒன்றாக அவர் நேஷனல் ஸ்டுடியோஸ், நியூடோன் ஸ்டுடியோஸ் மற்றும் வாஹினி ஸ்டூடியோ போன்றவற்றில் பணிபுரிந்து பெரும்புகழ் பெற்றார்.

பணிபுரிந்த திரைப்படங்கள்

ஜிந்தகி ஜீனே கே லியே (1984)
மாமாங்கம் (1979)
யெஹி ஹை ஜிந்தகி (1977)
ஸ்ரீ ராஜேஸ்வரி விலாஸ் காபி கிளப் (1976)
கர் கர் கி கஹானி (1970)
சாந்தி நிலையம் (1969)
சாத்தி (1968)
ராம் அவுர் ஷியாம் (1967)
செம்மீன் (1965)
குண்டம்மா கதா (1962)
ஜகடெக வீருனி கதா (1961)
அப்பு செசி பப்பு கூடு (1958)
மாயா பஜார் (1957)
மிஸ் அம்மா (1955)
ஸ்வரகசீமா (1945)
சந்திர ஹாரம் (1954)
கல்யாணம் பண்ணி பார் (1952)
பெல்லி செசி சூடு (1952)
பாதாள பைரவி (1951)
ஷவுகாரு (1950)
குணசுந்தரி கதா (1949)
யோகி வீமனா (1947)

x
^