Dec 02 2017

Views: 670

கலைமாமணி மாருதி ராவ்

“எதுவுமே இல்லாத போது, எல்லாவற்றையும் அப்பா நிகழ்த்திக் காட்டினார்…” ஒளிப்பதிவாளார் மாருதி ராவின் சாதனைகளை பட்டியலிடுகிறார்அவரது மகன்.

வாலி படத்தில், ஒரு அஜீத்தின் தோள் மீது, இன்னொரு அஜீத் அமர்ந்து சகோதர பாசத்தைக் காட்டினார்ஒரு சரத்குமாரின் கண்ணீரை, இன்னொருசரத்குமார் ஐயா படத்தில் துடைத்தார்ஒரு பிரசாந்த், இன்னொரு பிரசாந்த்தை ஜீன்ஸ் படத்தில் கட்டியணைத்தார்இந்தக் காட்சிகளை எல்லாம்நாம் மெய்மறந்து ரசித்தோம்வளர்ந்திருக்கும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி இது போல் எண்ணற்ற சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது.


ஆனால்ஒரு சிவாஜி கணேசனுக்கு நேர் பின்னால், பத்தடி தூரத்திலிருந்து இன்னொரு சிவாஜி கணேசன் நடந்து வருவதும்அமர்ந்திருக்கும்முந்தைய சிவாஜி கணேசனை இந்த சிவாஜி கணேசன் தன் கைகளால் நெறிப்பதும் உத்தம்புத்திரன் படத்தில் எப்படி சாத்தியமாயிற்று? குழந்தையும் தெய்வமும் படத்தில், ஒரு குட்டி பத்மினிக்கு, இன்னொரு குட்டி பத்மினி முத்தமிட்ட போது, முதல் குட்டி பத்மினியின் கன்னத்தில் எப்படி குழிவிழுந்தது.? பானுமதி ரயிலில் செல்லும் போது, மனசாட்சியாக இன்னொரு பானுமதி எதிரே வந்து அன்னை படத்தில் பாடுகிறார்பாடல் முடிவில்முதல் பானுமதி, தன் கைகளால் மனசாட்சி பானுமதியை அழித்தது எப்படி?

 

இது போல் பட்டியலிடவும் எண்ணற்றக் காட்சிகள் இதே தமிழ் சினிமாவில் கொட்டிக்கிடக்கின்றனஇதில் கவனிக்க வேண்டிய விஷயம்,தொழில்நுட்பம் கொஞ்சம் கூட வளர்ந்திராதஅறிமுகமாகாத காலகட்டத்தில்… அதுவும் கருப்பு வெள்ளை சினிமா காலத்தில்… இதையெல்லாம்தமிழ்ச் சினிமா சாதித்திருக்கிறது என்பதுதான்எப்படி முடிந்தது? ஒளிப்பதிவாளர்கள்தான் காரணம்அவர்களுள் ஒருவர்தான் பிரபலஒளிப்பதிவாளரான மாருதி ராவ்அவரது கைவண்ணம்தான் மேலே குறிப்பிட்ட காட்சிகளும்இன்னும் குறிப்பிடப்படாமல் இருக்கும் பல படங்களும்அவரது மறைவுக்கு பிறகும் இந்த ஜாலங்களை எப்படி நிகழ்த்தினார் என்பது சராசரி ரசிகனுக்கு புரிபடாமலேயே இருக்கிறதுஅதைவிளக்குகிறார் டாக்டர் மகேந்திரன்மாருதி ராவின் மகனான இவர் சென்னையைச் சேர்ந்த புகழ் பெற்ற .என்.டி மருத்துவர்களில் ஒருவர்தன்அப்பாதன்னிடம் பகிர்ந்து கொண்ட நுணுக்கங்களை உற்சாகத்துடன் விவரிக்க ஆரம்பித்தார் டாக்டர் மகேந்திரன்.

 

அப்போதைய அற்புதமான கற்பனை வளத்தின் பலன்தான்அந்தப் பிரமிக்க வைக்கும் காட்சிகள்இப்போதைய தரத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது,அந்நாளைய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்கேமராக்களை மட்டுமே நம்பி படம் எடுக்கவில்லைகாட்சிசூழ்நிலைஒளியமைப்புதன் சொந்தக்கற்பனை என்று மனதையும்மூளையையும் கசக்கிகேமராவுக்குள் புகுத்தி படம் எடுத்திருக்கிறார்கள்.

 

மேலே சொன்ன உத்தமபுத்திரன் படக்காட்சி ஒளிப்பதிவாளர் வின்சென்டின் கைவண்ணம்குழந்தையும் தெய்வமும்அன்னை படக்காட்சிகள் என்தந்தையாரின் தலைமைச் செயலகத்தில் உருவான சாமர்த்தியம்.

 

பள்ளி நாட்களிலிருந்தே அப்பாவுக்கு கேமரா மீது தீராக் காதல்சக மாணவர்களையும்சகோதரசகோதரிகளையும்தனக்கு கிடைத்த கேமரா மூலம்படமெடுத்து மகிழ்விப்பார்பள்ளியும்மற்ற பிற அமைப்புகளும் நடத்திய புகைப்படப் போட்டிகளில் பங்கேற்று பரிசும் வாங்கியிருக்கிறார்.அப்பாவின் பக்கத்து வீட்டில் இருந்தவர், பத்திரிக்கை ஒன்றில் ஆசிரியராக இருந்தவர்அவர் மூலமாக அடையாரில் இருந்த கார்த்திகா பிலிம்ஸ்நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளராக சேர்ந்தார்அவர்கள் தயாரித்த சூடாமணி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் உதவியாளராகப் பணியாற்றினர்.அடுத்தது கவி காளமேகம் படத்தில் ஒளிப்பதிவாளர் எல்லிஸ் ஆர்டங்கனுக்கு சீடரானார்.

 

வேல் பிக்சர்ஸ் தயாரித்த பக்திமாலா என்ற தெலுங்குப் படத்திற்கு பம்பாய் ஒளிப்பதிவாளர் ஒருவரை நியமித்திருந்தார்கள்அப்பாவுக்கு மராத்திதெரியும் என்பதால் அவருக்கு உதவியாளராகப் பொறுப்பேற்றார்அந்த நாட்களில் பாடல் காட்சியில் நடிக்கும் நடிகரே அந்தப் பாடலை பாடவேண்டும்அவர் பாடும் போதுகூடவே இசைக் குழுவினர் தத்தமது கருவிகளை இசைப்பார்கள்இதை அப்படியே ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.ஆமாம், நடிகருக்கு மேலே ஒரு மைக் தொங்கிக் கொண்டிருக்கும்எனவே அந்த மைக்கோ அல்லது அதன் நிழலோ பிரேமில் விழாதபடிஎச்சரிக்கையாகப் படம் எடுக்க வேண்டும்இசைக் குழுவினருக்கு தனி மைக்நடிகர் சத்தமாய்ப் பாடினால்தான் அவரிடமிருந்து சற்றுத்தொலைவிலிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு அந்தப் பாடல் காதில் விழும்இதனால்நடிகரின் உதட்டசைவு பாடலுக்கு பொருத்தமாக இருப்பதையும்உணர முடியும்.

 

இதுபோன்ற காட்சிக்காக நான்கு லென்ஸுகள் பொருத்தப்பட்ட கேமராவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 40,50,75,100 என போகல்லென்த் கொண்டலென்ஸுகள் அவைஇதன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளை பிறகு லாங் ஷாட்மிட் ஷாட்க்ளோஸ் அப் என்று பாடல் வரியின்பொருளுக்கேற்பவும்நடிகரின் முகபாவத்துக்குத் தகுந்தாற் போலவும்காட்சியின் சூழலுக்கு ஏற்பவும் எடிட் செய்துஅந்தப் பாடல் காட்சியைமுழுமையாக்குவார்கள்.

 

காரைக்குடியில் ஏவிஎம் செட்டியாருடைய பிரகதி ஸ்டுடியோ சார்பாக ஸ்ரீவள்ளி என்ற கன்னடப் படம் தயாரானதுஅதற்கு அப்பா ஸ்டில் படங்கள்எடுத்தார்ஒரு ஜெர்மன் ஒளிப்பதிவாளர் கேமராவைக் கையாண்டார்ஆனால்பாதியில் அந்த ஜெர்மன்காரர்தன் ஊரைப் பார்த்துப் போய்விடவே,நிறுவனம் திகைத்ததுஉடனே அப்படத்தின் இயக்குநரான ராகவேந்திர ராவ் அப்பாவிடம் அந்தப் பணியைத் தொடரச் சொல்லி பொறுப்பளித்தார்.அப்பா, அந்த ஜெர்மன்காரருக்குப் பெரிய பெருமை தேடித்தரும் வகையில் படத்தை ஒளிப்பதிவு செய்து, தன் திறமையையும் நிரூபித்தார்ஏவிஎம்சென்னைக்குத் குடிபெயர்ந்த போது இரண்டாவது கேமரா யூனிட்டில் அப்பாகேமராமேனாக பணி உயர்வு பெற்றார்இங்கே அவர்களது முதல் படம்ஓர் இரவு. அப்பாவின் கேமரா கைவண்ணத்தைக் கண்டு வியந்த பட இயக்குநர் கே ராம்நாத் – நான் விட்டதையெல்லாம் பிடிச்சுபல காட்சிகளைநிறைவாக்கிவிட்டாயேபலே.. –என்று பாராட்டினாராம்.

 

அடுத்து, பராசக்தி நடிகர்கள் தேர்வுக்காக மேக் அப் டெஸ்ட் நடைப்பெற்றதுசிவாஜி கணேசனுக்கு மேக் அப் செய்து பல கோணங்களில் அவரைப்படங்கள் எடுத்துஇவர் கதாநாயக வேடத்துக்குப் பொருத்தமானவர் என்று அப்பா ஏவிஎம் செட்டியாருக்குத் தன் முடிவைத் தெரிவித்தார்.செட்டியாருக்கு அரை மனசு, தம்பி தேறுவானா என்ற சந்தேகம்ஆனால் அப்பா, ‘இவரது கண்கள் ஒன்றே போதும்எந்த உணர்வையும்கண்களாலேயே வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் இவரிடம் இருக்கிறதுபளிச் பளிச் சென்று மாறும் முகபாவம்கணீரென்ற குரல்,
பிசிறில்லாத வசன உச்சரிப்பு எல்லாமே அபாரம்’ என்று அடித்துச் சொன்னார்தயக்கத்துடன் அதை ஏற்றுக் கொண்டார் செட்டியார்பிறகுபராசக்தியின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்த செட்டியார்அப்பாவிடம் நல்ல தேர்வு என்று சொல்லிப் பாராட்டினார்.

 

அந்தப் படத்தில் ‘பொருளே இல்லார்க்கு….’ என்றொரு பாடல் இடம் பெற்றிருக்கும்இரவுச் சூழல்சோகமான அந்தப் பாட்டுக்குப் பனி மூட்டமானபின்னணி பொருத்தமாக இருக்கும் என்று அப்பாவுக்குத் தோன்றியிருக்கிறதுஅதை இயக்குநரும் ஏற்றுக் கொள்ளஉடனே நியுஜால் என்ற ஒருரசாயனப் பொருளை வரவழைத்தார் அப்பாஅது பாரபின் என்ற வேதியல் பொருளின் திரவ நிலைஅதை அப்படியே செட்டினுள் மேலேகீழே,பக்கவாட்டில் என்று தெளித்துவிட்டு கேமராவை முடுக்கினார்அந்தப் பனிமூட்டப் பின்புலம்பாடலின் சோகத்தை மேலும் வலுவாக்கியது,பாராட்டுகளும் குவிந்தன.

 

ஒரே சமயத்தில் இரு குதிரைகளில் பயணம் செய்யும் வாய்ப்பும் அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கிறதுஅதாவது, – அந்த நாள் என்ற மர்மப் படத்தையும்,பேடர் கண்ணப்பா (கன்னடம்என்ற பக்திப் படத்தையும் ஒரே சமயத்தில் ஒளிப்பதிவு செய்தார்காலையிலும்மாலையிலுமாக இரு படங்களையும்இருள்ஒளி என்ற நேர் எதிரான இரு ஒளியமைப்பைக் கொண்டு படம் பிடித்தார்ஜெமினி ஸ்டூடியோவின் பிரம்மாண்ட தயாரிப்பான சந்திரலேகாபடத்தில் இடம் பெற்ற முரசு டான்ஸை யாராலும் மறக்க முடியாதுஅதைப் படமாக்க 4 கேமராக்களைப் பயன்படுத்தினார்கள்வெவ்வேறுகோணங்களில் பொருத்தப்பட்டு இயக்கப்பட்ட அந்த கேமராக்களில் ஒன்றைஅப்பாவும் இயக்கியிருக்கிறார்அதே போல் சர்வர் சுந்தரம் படத்தில்மகாபலிபுரத்தில் தன் தோழிகளுடன் கதாநாயகி பாடும் பாடலில் ஒரு காட்சி மட்டும் வித்தியாசமாக இருக்கும்இந்தக் கோணத்துக்காக ஐந்து ரதம்பகுதிக்கு அருகே மிகப் பெரிய பள்ளம் ஒன்றைத் தோண்டிஅதில் இறங்கி அப்பா படம் பிடித்தார் என்று சொன்ன டாக்டர் மகேந்திரன்குழந்தையும்தெய்வமும் படமாக்கப்பட்ட அதிசயத்தையும்மாருதி ராவின் மற்ற சாதனைகளையும் பட்டியலிட ஆரம்பித்தார்.

 

அந்தப் படத்தில் ஒரு நிலைக்கண்ணாடியில் பிம்பத்தை விழச் செய்து ஒரு குட்டி பத்மினிஇன்னொரு குட்டி பத்மினிக்கு கொடுக்கும் முத்தத்தால்,முதல் குட்டி பத்மினிக்குக் கன்னத்தில் குழி விழும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார்அது மட்டுமல்ல இரு குட்டி பத்மினிகளும் கைகுலுக்கிக்கொள்ள முனையும் போதுஒரு குட்டி பத்மினியின் கை நிழல் அடுத்த குட்டி பத்மினியின் கை மீது விழும் அற்புதமும் ரசிகர்களால்பாராட்டப்பட்டதுஇதற்கு முக்கியமான பிலிமை தேவைக்கேற்ப மறைத்து (மாஸ்கிங்ஒரு பகுதியை மட்டும் எக்ஸ்போஸ் செய்வதுசெட்டில்ஒளிவிளக்குகள்அவ்வாறு மறைப்பதற்கு முன் எப்படி உதவ வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டுஅதே போன்றோ அல்லது இந்தக்கட்டத்துக்குத் தேவைப்படுவது போலவோ மாற்றி அமைப்பது என்று தன் வெற்றிக்குப் பாதை வகுத்துக் கொண்டிருக்கிறார்.

 

அன்பே வா படத்தில்ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்என்ற பாடல் காட்சியில் எம் ஜி ஆரும்சரோஜாதேவியும் ராஜ உடையில்குதிரைகள்இழுக்கும் தேரில் பாடிக் கொண்டே செல்வார்கள்இருவருக்கும் ஆடம்பரமான உடையலங்காரம்இந்தக் காட்சிக்குப் பின்னணியும் இதே போல ரிச்ஆக இருப்பது தான் சரி என்று முடிவெடுத்தார் அப்பாராஜா ராணிகனவுக் காட்சி… அவர்கள் விண்ணில்பால்வெளியில் பறந்தால், பொருத்தமாகஇருக்கும் என்று தீர்மானித்தார்உடனே அந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று அமெரிக்கா தூதரகத்தில் இருந்த நூல் நிலையத்துக்கு சென்றுவிண்வெளி சம்பந்தப்பட்ட படங்கள் அடங்கிய புத்தகங்களைப் பார்வையிட்டார்நூல் நிலைய அதிகாரியின் அனுமதியுடன் அந்தப் படங்களைதன்கேமராவில் காப்பி செய்து கொண்டார்அதை பேக் ப்ரொஜக்ஷனாக ஓட விட்டுஅந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினார்இந்தக் காட்சிபடமாக்கப்படும் போதுஅந்த விண்வெளிக் காட்சியால் ஈர்க்கப்பட்ட எம் ஜி ஆர்ரொம்ப அற்புதமா இருக்குமுதல்ல இந்தப் பின்னணிக் காட்சியைமுழுசா பார்த்துட்டுஅப்புறமா நான் நடிக்கிறேன் என்று சொன்னாராம்.

 

அதே கண்கள் வண்ணத் திரைப்படம்தான்ஆனால் அது ஒரு மர்மப் படம் என்பதால் பெரும்பாலான திக்திக் காட்சிகளை கருப்பு –வெள்ளைதோரணையில் ஒளிப்பதிவு செய்துபடம் பார்ப்பவர்கள் மனதில் அதிக திகிலை ஊட்டினார்மொத்தத்தில் ஒளியைத் தன் வசப்படுத்தியவர் என்றேஅப்பாவை சொல்லலாம்நடிகர்களின் சரும நிறத்துக்கு ஏற்ப ஒளியை அமைத்து அதனாலேயே தனிச் சிறப்பு பெற்றார்உதாரணத்துக்கு அம்மைத் தழும்புகள் கொண்ட நடிகர் நாகேஷைச் சொல்லலாம்சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷும்கேஆர்விஜயாவும் பேசிக் கொள்ளும் காட்சியில்இருவரையும் தனித் தனியாக க்ளோஸ் அப்பில் காட்டும் போதும் சரிமிட் ஷாட்டில் இருவரையும் ஒன்றாகக் காட்டும்போதும் சரிஇருவர் மீதானஒளியும், அவரவர் சரும நிறத்துக்கு தகுந்தாற்போல் அமைக்கப்பட்டிருக்கும்கே பாலசந்தர்மேஜர் சந்திரகாந்த் படத்தை இயக்க முற்பட்டபோதுஒளிப்பதிவுக்கு அப்போது பிரபலமாக இருந்த நிமாய் கோஷை அணுகியிருக்கிறார்உடனே நிமாய் கோஷ், ’உங்க ஊர்லேயே மாருதிராவ்இருக்காரே, அந்த திறமைசாலியைப் பயன்படுத்திக்கோங்க.’ என்று சொல்லியிருக்கிறார்பிறகு அப்பா அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தபோதுஅவரது வித்தியாசமான கோணத்தையும்சிந்தனையையும் பார்த்துப் பிரமித்தார் கே.பி.

 

கொடக் நிறுவனம்புதிதாக 400 (.எஸ்.வேக ஈர்ப்புத் திறன் கொண்ட பிலிமைக் தயாரித்ததுஅதிவேகமாக செல்லும் கார்குதிரைபோன்றவற்றை இந்த பிலிமால்காட்சி கலங்கிவிடாமல்பளிச்சென்று நாம் நேரடியாகப் பார்ப்பது போலவே யதார்த்தமாகப் படமாக்க முடியும்.இந்த பிலிமின் தகுதியைச் சோதித்து அறிக்கை தரும் பொறுப்பு ஒரு ஆங்கிலேயர்ஒரு அமெரிக்கர் மற்றும் அப்பா ஆகியோரிடம்ஒப்படைக்கப்பட்டதுமூவரும் லண்டனில் உள்ள சினிசிட்டா ஸ்டுடியோவில் பல பரிசோதனைகளை மேற்கொண்டுஅந்த பிலிம்அதன்நோக்கத்துக்கு தகுதியுடன் இருப்பதை நிரூபித்தார்கள்அவர்களது அறிக்கைக்குப் பிறகு தான் அந்த பிலிம் முறைப்படி தயாரிக்கப்பட்டுவிநியோகிக்கப்பட்டது.

 

தொலைக்காட்சித் தொடர் ஒன்றிலும் அப்பா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார்அதுஅன்புள்ள அம்மா எனும் தொடர். சுபாஷ் சந்திரன்தயாரிக்கமனோரமாவும்மீனாவும் பிரதான வேடத்தில் நடித்திருந்தார்கள்அப்பாவும், கவிஞர் வாலியும் சேர்ந்து வடமாலை என்ற படத்தைதயாரித்து இயக்கினார்கள்அந்நாளைய ஸ்ரீ்காந்த் நடித்த வண்ணப் படம்அந்தப் படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில்நஷ்டமில்லை என்பதுதான் உண்மைஇதுபோகதமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனிலும்மத்திய அரசின் பிலிம் டிவிஷனுக்காக அகில இந்தியஅளவில் ஒளிப்பதிவாளர் தேர்வு குழுவிலும் அங்கம் வகித்திருக்கிறார்சென்னை திரைப்படக் கல்லூரியில் அப்பா விரிவுரையாளராகப் பாடம்எடுத்திருக்கிறார்அவரது மாணவர்களில் தங்கர் பச்சான்பி.சி.ஸ்ரீ்ராம் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்அந்தக் கல்லூரியில் வெறும் பாடம் மட்டும்அவர் நடத்தவில்லைஅப்போதைக்கப்போது முன்னேறி வரும் திரைப்படத் தொழில் நுணுக்கத்தைத் தானும் ஒரு மாணவராகக் கற்றுத்தேர்ந்திருக்கிறார்அதனால்தான் பிரிட்டிஷ் ராயல் போட்டோகிராபர் சொஸைட்டியில்பிரிட்டிஷ் அரசியாரின் அங்கீகாரம் பெற்ற உறுப்பினராகஅவருக்குக் கவுரவம் கிடைத்தது.. என்று தன் தந்தையின் சாதனைகளை சுருக்கமாக சொல்லி முடித்தார் டாக்டர் மகேந்திரன்.

 

இப்படிப்பட்ட ஜாம்பவன்களின் தோளில் அமர்ந்தபடிதான் இன்றைய ஒளிப்பதிவாளர்கள் படம் பிடித்து வருகிறார்கள் என்பதை உணரும் போதுபெருமையாகத்தான் இருக்கிறது.

x
^