Image uploading please wait...

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம்

SICA என்றறியப்படும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் 1972 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ம் தேதி துவக்கப்பட்டது.
திரு A.வின்சென்ட் அதன் முதல் தலைவராகவும் , திரு P.N.சுந்தரம் பொதுச்செயலாளராகவும், திரு S.மாருதி ராவ் பொருளாராகவும் பொறுப்பேற்றிருந்தனர். படத்தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டூடியோ நிர்வாகத்தினரிடம் சரியான தொடர்பிலிருந்துகொண்டு, சங்க உறுப்பினர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் வசதிகளைப் பெற்றுத் தருவது, இந்த சங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். SICA, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்புடன் (FEFSI) ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு அமைப்பாகும்.

இன்று SICA தமது உறுப்பினர்களின் கலையார்வத்தை மையமாகக் கொண்டு, தொடர் பயிற்சி, அனுபவப் பகிர்வுகள், துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிமுகம் போன்றவற்றை முன்னெடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் ஒருங்கிணைந்த கலை, மற்றும் பொருளாதார வளர்ச்சிகளை அடையமுடியும் என்று நம்புகிறது. இதில் உறுப்பினராகச் சேர முதன்மையாக தொழிற்படிப்புத் தகுதி, அனுபவ அறிவு ஆகியன அவசியமாகும். ஒளிப்பதிவாளர்கள், துணை ஒளிப்பதிவாளர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் என SICA உறுப்பினர்கள், பிரதானமாக வகைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.

அஞ்சலி: என். கே. விஸ்வநாதன்

NK_VISWANATHAN_Tamil_thumnail

மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள் போன்ற பிரபலமான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திரு. N.K.விஷ்வநாதன் அவர்கள். நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் இவரது ஒளிப்பதிவில் வெளிவந்திருக்கிறது

Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedIn
மேலும்...

தமிழ் இணையதளம் துவக்க விழா (22/01/2017)

SICA-Tamil-Website-Launch-Photos-88

‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்’ தமிழ் இணையதளம் மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கான ‘ SICA நாட்காட்டியும் ’, சென்னை, இந்தோ – ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் திரு. பாரதிராஜாவும் திரு.கமல்ஹாசன் அவர்களும் நாட்காட்டியை வெளியிட்டும், திரு.வைரமுத்து அவர்கள் இணையதளத்தை துவங்கி வைத்தும் சிறப்புரை ஆற்றினார்கள். நமது சங்க நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedIn
மேலும்...

அண்மைய வலைப்பதிவுகள்

2016 தேர்தல்

election

8 ஆண்டுகளுக்கு பிறகு, எங்கள் சங்கத்தின் தேர்தல்10 ஜனவரி அன்று நடைபெற்றது. திரு.பி.சி.ஸ்ரீராம், திரு.பி.கண்ணன் மற்றும் திரு.ராஜீவ்மேனன் போன்ற பிரபலங்கள் போட்டியிட்டு, தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றார்கள். அவர்களின் அணியின் 19 பேரும் போட்டியிட்ட பதவிகளை வென்றார்கள். 12 ஜனவரி 2016 அன்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட பின்னர் நிர்வாகிகளாக பொறுப்பேற்றார்கள்.

Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedIn
மேலும்...

நினைவு அஞ்சலி

06MP-marcusbartley2_B

மாஸ்டர் மார்கஸ் பார்ட்லியின் சென்டர் (1917-2017): மார்கஸ் பார்ட்லி இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ஆவார். அவரது படங்கள் தென்னிந்திய திரைப்படத் தொழில்துறையின் பெஞ்ச் அடையாளமாக இருந்தன மற்றும் ஒளிப்பதிவாளர்களின் தூண்டுதலால் எழுதப்பட்ட தலைமுறையினரின் குறிப்புகளை

Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedIn
மேலும்...
The Masters
Qubewire-1124-X-565-2

தற்போதைய நிர்வாகிகள்

Copyright © thesica.in - All Rights Reserved - Privacy Policy | Designed by Seedroot

Sign In