Dec 26 2017

Views: 3098

ஸ்டெல்லா ஒளிரிகள் (Stella lights):

டிஜிட்டல் முறையில் உருவாகிவரும் திரைப்பட தொழிற் நுட்பத்தில் நாளுக்கு நாள் ஏற்படும் வியத்தகு மாற்றங்களால், காமிராக்களின் உருவ அளவுகளில் சிறியதாகிக்கொண்டே போனாலும், வீடியோ மற்றும் அதிக ரெஷல்யூஷன் படங்களை (High resolution Images) பதிவு செய்ய முடிகிறது. அதற்கேற்றவாறு தொடர் ஒளிரிகளான ( Continuous lights) வகைகளிலும், அளவில் சிறிய மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப எளிய வடிவில் மாறி வருகின்றன.

எல்.இ.டி ( LED- Light emitteing Diode) வகை ஒளிரிகளை “லைட் & மோஷன்”-ஆனது படப்பதிவுகளுக்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது மிகவும் கச்சிதமானதாகவும் (very compact), தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் (Remote Controlled) , திறன்வாய்ந்த (Powerful), வெளி மின் இணைப்புகள் அல்லாத (cord free) மற்றும் மிக முக்கியமாக ‘ஒற்றை ஒளிரி’ (single source light) அமைப்பைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த வகை ஒளிரிகள் ‘அதி திறன் பேட்டரி’ ( High Capacity batteries) கொண்டுள்ளது. பிரத்யோகமாக ஒளிரிக்கு உள்ளேயே அமையப்பெற்ற பேட்டரிவகைகளானது 5 மணி நேரத்திற்கும் மேலாக உழைக்கக்கூடியது. அதே போல் வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், இதற்கென தனியே பேட்டரிகளை வாங்கும் அவசியமோ அல்லது காமிரா பேட்டரிகளை கொண்டு இயங்கும் ஒளிரிகளுக்கோ அவசியம் இருக்காது.

ஸ்டெல்லா-வின் ‘ஒற்றை மைய ஒளிரி’ எல்.இ. டி-களில் ஐந்து வேறு வகைகளில் கிடைக்கிறது.

Stella 1000
Stella 2000
PRO5000rf
PRO8000rf
PRO10000c (சார்புடைது)

‘6’-வகையான வெவ்வேறு நிலைகளில் ஒளிரும் தன்மையினை கூசச்செய்யும், மங்கச்செய்யும் டிம்மர்(Built-in Dimmer) கொண்டுள்ளது.

எல்.இ. டி வகை ஒளிரி என்பதால், மங்கச்செய்யும் பொழுது ‘நிற வெப்பநிலை-Color temperature’-ல் மாற்றம் இருக்காது.

டிம்மர் கட்டுப்பாட்டு ஸ்விட்ச்சை “ஆஃப்” செய்த பிறகு, “லாக்” நிலையில் வைத்துவிட்டால், விபத்து தடுக்குப்பானாக அமைந்துவிடும்.

லைட் & மோஷன் ஆனது நிறைய இந்த ஒளிரிகளுக்கேற்றவாறு விதவிதமான ‘பொருத்தும் உபகரணம், கைப்பிடிகள் என உபரி பாகங்கள் பரவலாக கிடைக்கிறது. அதேபோல் “பார்ன் டோர், ஒளி மாற்றிகள், க்ளிப்புகள் 25° ஃப்ரெனல் லென்ஸ், 50° லென்ஸ், விரைவி க்ளிப்புகள், ஜெல் பிடிப்பான், குளோ பல்ப்.

ஸ்டெல்லா ஒளிரிகளானது, தோராயமாக 100 மீட்டர்கள் ஆழத்திலும் கூட பயன்படுத்தும் வகையிலும் ‘Under water lighting’ எனப்படும் வகையில் நீர் ஆழ லைட்டரிங் முறையிலும், தண்ணீர் பட்டாலும் பாதிக்காத வகையிலும் (Water proofed) தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டெல்லா 1000 (Stella 1000):

1000 லுமன்ஸ் வெளியீடு
277 கிராம் எடை
CRI மதிப்பு 90+
5600° கெல்வின்

ஸ்டெல்லா 2000 (Stella 2000):

2000 லுமன்ஸ்
504 கிராம் எடை
CRI மதிப்பு 90+
5600° கெல்வின்

ஸ்டெல்லா ப்ரோ 5000 RF (Stella pro 5000 RF):

5000 லுமன்ஸ்
1148 கிராம் எடை
CRI value 90+
5600/3000° கெல்வின்

ஸ்டெல்லா ப்ரோ 8000 RF (Stella pro 8000 RF):

8000 லுமன்ஸ்
1156 கிராம் எடை
CRI value 90+
5600/3000° கெல்வின்

ஸ்டெல்லா ப்ரோ 10000 சார்புடையது (Stella pro 10000 corded):

10000 லுமன்ஸ்
750 கிராம் எடை
CRI value 90+
5600/3000° கெல்வின்

இந்த எல்லா ஒளிரிகளும் 120° சீரான பீம் கோணம் கொண்டது. ஸ்டெல்லா 1000 ஆனது 75W டங்ஸ்டன் விளக்கிற்கு இணையானது. ஸ்டெல்லா 2000 ஆனது ஏறக்குறைய 200W டங்ஸ்டன் விளக்கிற்கு இணையானது. இந்த எல்.ஈ.டி ஒளிரிகளை எங்கு வேண்டுமானாலும், தலைகவசத்தில் கூட பொருத்திக் கொள்ளலாம்.

மொழியாக்கம்.

இளவரசன் தேவராஜன்

SICA உறுப்பினர்.

x
^