Dec 02 2017

Views: 661

Kalaimamani S. Maruthi Rao

“எதுவுமே இல்லாத போது, எல்லாவற்றையும் அப்பா நிகழ்த்திக் காட்டினார்…” ஒளிப்பதிவாளார் மாருதி ராவின் சாதனைகளைபட்டியலிடுகிறார்அவரதுமகன்.

வாலி படத்தில், ஒரு அஜீத்தின் தோள் மீது, இன்னொரு அஜீத் அமர்ந்து சகோதர பாசத்தைக் காட்டினார்ஒரு சரத்குமாரின்கண்ணீரை,இன்னொருசரத்குமார் ஐயா படத்தில் துடைத்தார்ஒரு பிரசாந்த், இன்னொரு பிரசாந்த்தை ஜீன்ஸ் படத்தில்கட்டியணைத்தார்இந்தக் காட்சிகளைஎல்லாம் நாம்மெய்மறந்து ரசித்தோம்வளர்ந்திருக்கும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிஇது போல் எண்ணற்ற சாத்தியங்களைஉருவாக்கியிருக்கிறது.


ஆனால்ஒரு சிவாஜி கணேசனுக்கு நேர் பின்னால், பத்தடி தூரத்திலிருந்து இன்னொரு சிவாஜி கணேசன் நடந்து வருவதும்,அமர்ந்திருக்கும்முந்தையசிவாஜி கணேசனை இந்த சிவாஜி கணேசன் தன் கைகளால் நெறிப்பதும் உத்தம்புத்திரன் படத்தில் எப்படிசாத்தியமாயிற்று? குழந்தையும் தெய்வமும் படத்தில், ஒரு குட்டி பத்மினிக்கு, இன்னொரு குட்டி பத்மினி முத்தமிட்ட போது, முதல்குட்டி பத்மினியின் கன்னத்தில் எப்படி குழிவிழுந்தது.? பானுமதிரயிலில் செல்லும் போது, மனசாட்சியாக இன்னொரு பானுமதிஎதிரே வந்து அன்னை படத்தில் பாடுகிறார்பாடல் முடிவில்முதல் பானுமதி, தன்கைகளால் மனசாட்சி பானுமதியை அழித்தது எப்படி?

 

இது போல் பட்டியலிடவும் எண்ணற்றக் காட்சிகள் இதே தமிழ் சினிமாவில் கொட்டிக்கிடக்கின்றனஇதில் கவனிக்கவேண்டியவிஷயம்,தொழில்நுட்பம் கொஞ்சம் கூட வளர்ந்திராதஅறிமுகமாகாத காலகட்டத்தில்… அதுவும் கருப்பு வெள்ளை சினிமாகாலத்தில்… இதையெல்லாம்தமிழ்ச் சினிமா சாதித்திருக்கிறது என்பதுதான்எப்படி முடிந்தது? ஒளிப்பதிவாளர்கள்தான் காரணம்,அவர்களுள் ஒருவர்தான்பிரபலஒளிப்பதிவாளரான மாருதி ராவ்அவரது கைவண்ணம்தான் மேலே குறிப்பிட்ட காட்சிகளும்,இன்னும் குறிப்பிடப்படாமல் இருக்கும் பல படங்களும்அவரது மறைவுக்கு பிறகும் இந்த ஜாலங்களை எப்படி நிகழ்த்தினார் என்பதுசராசரி ரசிகனுக்கு புரிபடாமலேயே இருக்கிறதுஅதைவிளக்குகிறார் டாக்டர் மகேந்திரன்மாருதி ராவின் மகனான இவர்சென்னையைச் சேர்ந்த புகழ் பெற்ற .என்.டி மருத்துவர்களில் ஒருவர்தன்அப்பாதன்னிடம் பகிர்ந்து கொண்ட நுணுக்கங்களைஉற்சாகத்துடன் விவரிக்க ஆரம்பித்தார் டாக்டர் மகேந்திரன்.

 

அப்போதைய அற்புதமான கற்பனை வளத்தின் பலன்தான்அந்தப் பிரமிக்க வைக்கும் காட்சிகள்இப்போதைய தரத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது,அந்நாளைய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்கேமராக்களை மட்டுமே நம்பி படம் எடுக்கவில்லைகாட்சிசூழ்நிலை,ஒளியமைப்புதன்சொந்தக்கற்பனை என்று மனதையும்மூளையையும் கசக்கிகேமராவுக்குள் புகுத்தி படம் எடுத்திருக்கிறார்கள்.

 

மேலே சொன்ன உத்தமபுத்திரன் படக்காட்சி ஒளிப்பதிவாளர் வின்சென்டின் கைவண்ணம்குழந்தையும் தெய்வமும்அன்னைபடக்காட்சிகள்என்தந்தையாரின் தலைமைச் செயலகத்தில் உருவான சாமர்த்தியம்.

 

பள்ளி நாட்களிலிருந்தே அப்பாவுக்கு கேமரா மீது தீராக் காதல்சக மாணவர்களையும்சகோதரசகோதரிகளையும்தனக்குகிடைத்த கேமராமூலம்படமெடுத்து மகிழ்விப்பார்பள்ளியும்மற்ற பிற அமைப்புகளும் நடத்திய புகைப்படப் போட்டிகளில்பங்கேற்று பரிசும்வாங்கியிருக்கிறார்.அப்பாவின் பக்கத்து வீட்டில் இருந்தவர், பத்திரிக்கை ஒன்றில் ஆசிரியராக இருந்தவர்அவர்மூலமாக அடையாரில் இருந்தகார்த்திகா பிலிம்ஸ்நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளராக சேர்ந்தார்அவர்கள் தயாரித்த சூடாமணிஎன்ற தெலுங்குத் திரைப்படத்தில் உதவியாளராகப்பணியாற்றினர்.அடுத்தது கவி காளமேகம் படத்தில் ஒளிப்பதிவாளர் எல்லிஸ்ஆர்டங்கனுக்கு சீடரானார்.

 

வேல் பிக்சர்ஸ் தயாரித்த பக்திமாலா என்ற தெலுங்குப் படத்திற்கு பம்பாய் ஒளிப்பதிவாளர் ஒருவரை நியமித்திருந்தார்கள்.அப்பாவுக்குமராத்திதெரியும் என்பதால் அவருக்கு உதவியாளராகப் பொறுப்பேற்றார்அந்த நாட்களில் பாடல் காட்சியில் நடிக்கும்நடிகரே அந்தப் பாடலைபாடவேண்டும்அவர் பாடும் போதுகூடவே இசைக் குழுவினர் தத்தமது கருவிகளை இசைப்பார்கள்இதைஅப்படியே ஒலிப்பதிவு செய்யவேண்டும்.ஆமாம், நடிகருக்கு மேலே ஒரு மைக் தொங்கிக் கொண்டிருக்கும்எனவே அந்த மைக்கோஅல்லது அதன் நிழலோ பிரேமில்விழாதபடிஎச்சரிக்கையாகப் படம் எடுக்க வேண்டும்இசைக் குழுவினருக்கு தனி மைக்நடிகர்சத்தமாய்ப் பாடினால்தான் அவரிடமிருந்துசற்றுத்தொலைவிலிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு அந்தப் பாடல் காதில் விழும்இதனால்,நடிகரின் உதட்டசைவு பாடலுக்கு பொருத்தமாகஇருப்பதையும்உணர முடியும்.

 

இதுபோன்ற காட்சிக்காக நான்கு லென்ஸுகள் பொருத்தப்பட்ட கேமராவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 40,50,75,100 எனபோகல்லென்த்கொண்டலென்ஸுகள் அவைஇதன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளை பிறகு லாங் ஷாட்மிட் ஷாட்க்ளோஸ் அப்என்று பாடல் வரியின்பொருளுக்கேற்பவும்நடிகரின் முகபாவத்துக்குத் தகுந்தாற் போலவும்காட்சியின் சூழலுக்கு ஏற்பவும் எடிட்செய்துஅந்தப் பாடல் காட்சியைமுழுமையாக்குவார்கள்.

 

காரைக்குடியில் ஏவிஎம் செட்டியாருடைய பிரகதி ஸ்டுடியோ சார்பாக ஸ்ரீவள்ளி என்ற கன்னடப் படம் தயாரானதுஅதற்கு அப்பாஸ்டில்படங்கள்எடுத்தார்ஒரு ஜெர்மன் ஒளிப்பதிவாளர் கேமராவைக் கையாண்டார்ஆனால்பாதியில் அந்த ஜெர்மன்காரர்தன்ஊரைப் பார்த்துப்போய்விடவே,நிறுவனம் திகைத்ததுஉடனே அப்படத்தின் இயக்குநரான ராகவேந்திர ராவ் அப்பாவிடம் அந்தப்பணியைத் தொடரச் சொல்லிபொறுப்பளித்தார்.அப்பா, அந்த ஜெர்மன்காரருக்குப் பெரிய பெருமை தேடித்தரும் வகையில்படத்தை ஒளிப்பதிவு செய்து, தன் திறமையையும்நிரூபித்தார்ஏவிஎம்சென்னைக்குத் குடிபெயர்ந்த போது இரண்டாவது கேமராயூனிட்டில் அப்பாகேமராமேனாக பணி உயர்வு பெற்றார்இங்கேஅவர்களது முதல் படம்ஓர் இரவு. அப்பாவின் கேமராகைவண்ணத்தைக் கண்டு வியந்த பட இயக்குநர் கே ராம்நாத் – நான் விட்டதையெல்லாம் பிடிச்சுபலகாட்சிகளைநிறைவாக்கிவிட்டாயேபலே.. –என்று பாராட்டினாராம்.

 

அடுத்து, பராசக்தி நடிகர்கள் தேர்வுக்காக மேக் அப் டெஸ்ட் நடைப்பெற்றதுசிவாஜி கணேசனுக்கு மேக் அப் செய்து பலகோணங்களில்அவரைப்படங்கள் எடுத்துஇவர் கதாநாயக வேடத்துக்குப் பொருத்தமானவர் என்று அப்பா ஏவிஎம்செட்டியாருக்குத் தன் முடிவைத்தெரிவித்தார்.செட்டியாருக்கு அரை மனசு, தம்பி தேறுவானா என்ற சந்தேகம்ஆனால் அப்பா, ‘இவரது கண்கள் ஒன்றே போதும்எந்தஉணர்வையும்கண்களாலேயே வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் இவரிடம் இருக்கிறதுபளிச்பளிச் சென்று மாறும் முகபாவம்கணீரென்ற குரல்,
பிசிறில்லாத வசன உச்சரிப்பு எல்லாமே அபாரம்’ என்று அடித்துச் சொன்னார்தயக்கத்துடன் அதை ஏற்றுக் கொண்டார் செட்டியார்.பிறகுபராசக்தியின்வெற்றியைக் கண்டு மகிழ்ந்த செட்டியார்அப்பாவிடம் நல்ல தேர்வு என்று சொல்லிப் பாராட்டினார்.

 

அந்தப் படத்தில் ‘பொருளே இல்லார்க்கு….’ என்றொரு பாடல் இடம் பெற்றிருக்கும்இரவுச் சூழல்சோகமான அந்தப் பாட்டுக்குப்பனிமூட்டமானபின்னணி பொருத்தமாக இருக்கும் என்று அப்பாவுக்குத் தோன்றியிருக்கிறதுஅதை இயக்குநரும் ஏற்றுக் கொள்ள,உடனே நியுஜால்என்ற ஒருரசாயனப் பொருளை வரவழைத்தார் அப்பாஅது பாரபின் என்ற வேதியல் பொருளின் திரவ நிலைஅதைஅப்படியே செட்டினுள் மேலேகீழே,பக்கவாட்டில் என்று தெளித்துவிட்டு கேமராவை முடுக்கினார்அந்தப் பனிமூட்டப் பின்புலம்,பாடலின் சோகத்தை மேலும்வலுவாக்கியது,பாராட்டுகளும் குவிந்தன.

 

ஒரே சமயத்தில் இரு குதிரைகளில் பயணம் செய்யும் வாய்ப்பும் அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கிறதுஅதாவது, – அந்த நாள் என்ற மர்மப்படத்தையும்,பேடர்கண்ணப்பா (கன்னடம்என்ற பக்திப் படத்தையும் ஒரே சமயத்தில் ஒளிப்பதிவு செய்தார்காலையிலும்,மாலையிலுமாக இரு படங்களையும்இருள்ஒளி என்ற நேர் எதிரான இரு ஒளியமைப்பைக் கொண்டு படம் பிடித்தார்ஜெமினிஸ்டூடியோவின் பிரம்மாண்ட தயாரிப்பான சந்திரலேகாபடத்தில்இடம் பெற்ற முரசு டான்ஸை யாராலும் மறக்க முடியாதுஅதைப்படமாக்க 4 கேமராக்களைப் பயன்படுத்தினார்கள்வெவ்வேறுகோணங்களில்பொருத்தப்பட்டு இயக்கப்பட்ட அந்த கேமராக்களில்ஒன்றைஅப்பாவும் இயக்கியிருக்கிறார்அதே போல் சர்வர் சுந்தரம் படத்தில்மகாபலிபுரத்தில் தன்தோழிகளுடன் கதாநாயகிபாடும் பாடலில் ஒரு காட்சி மட்டும் வித்தியாசமாக இருக்கும்இந்தக் கோணத்துக்காக ஐந்து ரதம்பகுதிக்கு அருகே மிகப்பெரியபள்ளம் ஒன்றைத் தோண்டிஅதில் இறங்கி அப்பா படம் பிடித்தார் என்று சொன்ன டாக்டர் மகேந்திரன்குழந்தையும்தெய்வமும்படமாக்கப்பட்டஅதிசயத்தையும்மாருதி ராவின் மற்ற சாதனைகளையும் பட்டியலிட ஆரம்பித்தார்.

 

அந்தப் படத்தில் ஒரு நிலைக்கண்ணாடியில் பிம்பத்தை விழச் செய்து ஒரு குட்டி பத்மினிஇன்னொரு குட்டி பத்மினிக்கு கொடுக்கும்முத்தத்தால்,முதல்குட்டி பத்மினிக்குக் கன்னத்தில் குழி விழும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார்அது மட்டுமல்ல இரு குட்டிபத்மினிகளும் கைகுலுக்கிக்கொள்ளமுனையும் போதுஒரு குட்டி பத்மினியின் கை நிழல் அடுத்த குட்டி பத்மினியின் கை மீதுவிழும் அற்புதமும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.இதற்குமுக்கியமான பிலிமை தேவைக்கேற்ப மறைத்து (மாஸ்கிங்ஒரு பகுதியைமட்டும் எக்ஸ்போஸ் செய்வதுசெட்டில் ஒளிவிளக்குகள்,அவ்வாறுமறைப்பதற்கு முன் எப்படி உதவ வேண்டும் என்பதை நினைவில்வைத்துக் கொண்டுஅதே போன்றோ அல்லது இந்தக் கட்டத்துக்குத்தேவைப்படுவதுபோலவோ மாற்றி அமைப்பது என்று தன்வெற்றிக்குப் பாதை வகுத்துக் கொண்டிருக்கிறார்.

 

அன்பே வா படத்தில்ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்என்ற பாடல் காட்சியில் எம் ஜி ஆரும்சரோஜாதேவியும் ராஜஉடையில்,குதிரைகள்இழுக்கும் தேரில் பாடிக் கொண்டே செல்வார்கள்இருவருக்கும் ஆடம்பரமான உடையலங்காரம்இந்தக்காட்சிக்குப்பின்னணியும் இதே போல ரிச்ஆக இருப்பது தான் சரி என்று முடிவெடுத்தார் அப்பாராஜா ராணிகனவுக் காட்சி… அவர்கள்விண்ணில்பால்வெளியில் பறந்தால், பொருத்தமாகஇருக்கும் என்று தீர்மானித்தார்உடனே அந்தக் காட்சி எப்படி இருக்கும் என்றுஅமெரிக்கா தூதரகத்தில் இருந்தநூல் நிலையத்துக்கு சென்றுவிண்வெளி சம்பந்தப்பட்ட படங்கள் அடங்கிய புத்தகங்களைப் பார்வையிட்டார்நூல் நிலைய அதிகாரியின் அனுமதியுடன்அந்தப் படங்களைதன்கேமராவில் காப்பி செய்து கொண்டார்அதைபேக் ப்ரொஜக்ஷனாக ஓட விட்டுஅந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினார்இந்தக்காட்சிபடமாக்கப்படும் போதுஅந்தவிண்வெளிக் காட்சியால் ஈர்க்கப்பட்ட எம் ஜி ஆர்ரொம்ப அற்புதமா இருக்குமுதல்ல இந்தப் பின்னணிக்காட்சியைமுழுசாபார்த்துட்டுஅப்புறமா நான் நடிக்கிறேன் என்று சொன்னாராம்.

 

அதே கண்கள் வண்ணத் திரைப்படம்தான்ஆனால் அது ஒரு மர்மப் படம் என்பதால் பெரும்பாலான திக்திக் காட்சிகளை கருப்பு –வெள்ளைதோரணையில் ஒளிப்பதிவு செய்துபடம் பார்ப்பவர்கள் மனதில் அதிக திகிலை ஊட்டினார்மொத்தத்தில் ஒளியைத் தன்வசப்படுத்தியவர்என்றேஅப்பாவை சொல்லலாம்நடிகர்களின் சரும நிறத்துக்கு ஏற்ப ஒளியை அமைத்து அதனாலேயே தனிச்சிறப்பு பெற்றார்உதாரணத்துக்குஅம்மைத் தழும்புகள் கொண்ட நடிகர் நாகேஷைச் சொல்லலாம்சர்வர் சுந்தரம் படத்தில்நாகேஷும்கேஆர்விஜயாவும் பேசிக் கொள்ளும்காட்சியில்இருவரையும் தனித் தனியாக க்ளோஸ் அப்பில் காட்டும் போதும் சரி,மிட் ஷாட்டில் இருவரையும் ஒன்றாகக் காட்டும்போதும் சரிஇருவர்மீதானஒளியும், அவரவர் சரும நிறத்துக்கு தகுந்தாற்போல்அமைக்கப்பட்டிருக்கும்கே பாலசந்தர்மேஜர் சந்திரகாந்த் படத்தை இயக்கமுற்பட்டபோதுஒளிப்பதிவுக்கு அப்போது பிரபலமாகஇருந்த நிமாய் கோஷை அணுகியிருக்கிறார்உடனே நிமாய் கோஷ், ’உங்க ஊர்லேயேமாருதிராவ்இருக்காரே, அந்ததிறமைசாலியைப் பயன்படுத்திக்கோங்க.’ என்று சொல்லியிருக்கிறார்பிறகு அப்பா அந்தப் படத்துக்குஒளிப்பதிவுசெய்தபோதுஅவரது வித்தியாசமான கோணத்தையும்சிந்தனையையும் பார்த்துப் பிரமித்தார் கே.பி.

 

கொடக் நிறுவனம்புதிதாக 400 (.எஸ்.வேக ஈர்ப்புத் திறன் கொண்ட பிலிமைக் தயாரித்ததுஅதிவேகமாக செல்லும் கார்,குதிரைபோன்றவற்றைஇந்த பிலிமால்காட்சி கலங்கிவிடாமல்பளிச்சென்று நாம் நேரடியாகப் பார்ப்பது போலவே யதார்த்தமாகப்படமாக்க முடியும்.இந்த பிலிமின்தகுதியைச் சோதித்து அறிக்கை தரும் பொறுப்பு ஒரு ஆங்கிலேயர்ஒரு அமெரிக்கர் மற்றும் அப்பாஆகியோரிடம்ஒப்படைக்கப்பட்டதுமூவரும் லண்டனில் உள்ள சினிசிட்டா ஸ்டுடியோவில் பல பரிசோதனைகளை மேற்கொண்டு,அந்த பிலிம்அதன்நோக்கத்துக்கு தகுதியுடன் இருப்பதைநிரூபித்தார்கள்அவர்களது அறிக்கைக்குப் பிறகு தான் அந்த பிலிம்முறைப்படி தயாரிக்கப்பட்டுவிநியோகிக்கப்பட்டது.

 

தொலைக்காட்சித் தொடர் ஒன்றிலும் அப்பா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார்அதுஅன்புள்ள அம்மா எனும் தொடர்.சுபாஷ்சந்திரன்தயாரிக்கமனோரமாவும்மீனாவும் பிரதான வேடத்தில் நடித்திருந்தார்கள்அப்பாவும், கவிஞர் வாலியும் சேர்ந்துவடமாலை என்றபடத்தைதயாரித்து இயக்கினார்கள்அந்நாளைய ஸ்ரீ்காந்த் நடித்த வண்ணப் படம்அந்தப் படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் பொருளாதாரரீதியில்நஷ்டமில்லை என்பதுதான் உண்மைஇதுபோகதமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ்கமிஷனிலும்மத்திய அரசின் பிலிம் டிவிஷனுக்காக அகிலஇந்தியஅளவில் ஒளிப்பதிவாளர் தேர்வு குழுவிலும் அங்கம்வகித்திருக்கிறார்சென்னை திரைப்படக் கல்லூரியில் அப்பா விரிவுரையாளராகப்பாடம்எடுத்திருக்கிறார்அவரது மாணவர்களில்தங்கர் பச்சான்பி.சி.ஸ்ரீ்ராம் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்அந்தக் கல்லூரியில் வெறும் பாடம்மட்டும்அவர் நடத்தவில்லை,அப்போதைக்கப்போது முன்னேறி வரும் திரைப்படத் தொழில் நுணுக்கத்தைத் தானும் ஒருமாணவராகக்கற்றுத்தேர்ந்திருக்கிறார்அதனால்தான் பிரிட்டிஷ் ராயல் போட்டோகிராபர் சொஸைட்டியில்பிரிட்டிஷ் அரசியாரின் அங்கீகாரம்பெற்றஉறுப்பினராகஅவருக்குக் கவுரவம் கிடைத்தது.. என்று தன் தந்தையின் சாதனைகளை சுருக்கமாக சொல்லி முடித்தார்டாக்டர் மகேந்திரன்.

 

இப்படிப்பட்ட ஜாம்பவன்களின் தோளில் அமர்ந்தபடிதான் இன்றைய ஒளிப்பதிவாளர்கள் படம் பிடித்து வருகிறார்கள் என்பதைஉணரும்போதுபெருமையாகத்தான் இருக்கிறது.

x
^