
திரைப்படத்துறையில் இயங்கும் ஒளிப்பதிவாளர்கள், கேஃபர்கள் மற்றும் நிறத்திருத்தம் செய்யும் கலைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தையான காண்ட்ராஸ்ட் தொழில்நுட்பரீதியாக வேறுபாடுகளைக் குறிக்கும். லைட்டிங், நிறம், கம்போஷிஷன் என்று பல வேறுபாடுகள் இருந்தாலும் காண்ட்ராஸ்ட் முதன்மையாக அறியப்படுவது தொனி (tone) என்ற விஷுவல் அமைப்பில்தான். பொதுவாக, அதிக வேறுபாடுகள் ஃப்ரேமில் இருந்தால் அடர்த்தியான விஷுவல்கள் அமைக்கலாம். ஒளிப்படப்பதிவில் நிறங்களைத் தேர்வு செய்வது ஒரு கலை என்றால் அந்நிறங்களைக் கொண்டு ஒருங்கிணைப்பதும் வேறுபாடுகளை உருவாக்குவதும் […]