P.S.நிவாஸ்- மாபெரும் ஒளிக்கலைஞன்

இந்திய சினிமாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளர்களுள் P.S.நிவாஸ் தனித்துவம் வாய்தவர். நேற்று காலை கேரளாவில் இயற்க்கை எய்தினார். P.S.நிவாஸ் அடையாறு திரைப்படக்கல்லூரி மாணவரான P.S.நிவாஸ் மலையாளத் திரையுலகில் மோகினி ஆட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகமானார். 1976ம் ஆண்டு வெளிவந்த இப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்றார். நிவாஸின் ஒளிப்பதிவில்தான் தமிழ் சினிமாவின் மாபெரும் திருப்புமுனையான இயக்குநர் பாரதிராஜாவின் 16 வயதினிலே உருவானது. படம் முழுவதும் அவுட்டோர் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. […]