காமிரா அதன் மிக எளிய தொடக்க காலத்திலிருந்து நீண்ட நெடுந்தொலைவு வந்துவிட்டது. ஆரம்பகால காமிராக்களில் லென்ஸ் கூட இல்லை. அதற்கு பதிலாக, ஒரு மிகச்சிறிய துவாரத்தின் வழியேதான் ஒளி ஊடுருவிச் சென்று, காமிராவிற்குள் (Camera Obscura) உள்ள இருட்டறையில் காட்சி உருவானது.
இன்று உலகம் முற்றிலுமாக டிஜிட்டல் மயமாகிவிட்ட சூழ்நிலையில், பல்வேறு வகையான வடிவங்களில் காமிராக்கள் தயாரிக்கப்படுகின்றன.
விடியோ காமிராவில் ஃபிலிமிற்கு பதிலாக விடியோ டேப் மூலம் ஒளிப்பதிவு செய்யும் முறை ஆரம்பத்தில் “எலக்ட்ரானிக் ஒளிப்பதிவு” என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அதன் வளர்ச்சியாக இன்று “டிஜிட்டல் ஒளிப்பதிவு”, உலகம் முழுவதும் திரைப்பட ஒளிப்பதிவின் முக்கிய தொழில்நுட்ப சாதனையாகக் கருதப்படுகிறது.
டிஜிட்டல் காமிராக்களில் ஃபிலிமிற்கு பதிலாக “சென்சார்” இதயப்பகுதியாக விளங்குகிறது. அதன் செயல்பாட்டை வைத்தே இக்காமிராக்களின் தரத்தை அறியலாம்.
காட்சியை பதிவு செய்வதே சினிமட்டோகிராஃபி எனப்படும் ஒளிப்பதிவுக் கலையின் அடிப்படைத் தத்துவம்.
ஒளியானது லென்ஸ் வழியாக காமிராவினுள் இருண்ட அறையில் உள்ள “சென்சார்” மீது படும்படியாக இன்றைய டிஜிட்டல் காமிராக்கள் உருவாக்கப்படுகின்றன.
ஃபிலிம் காமிராவில் ஒளியானது காமிரா லென்ஸ் மூலமாக பயணம் செய்து ஃபிலிமில் பதிவு செய்யப்படுகிறது. டிஜிட்டல் காமிராவில் லென்ஸ் வழியாக வரும் ஒளி “சென்சார்” மூலமாக காமிராவில் உள்ள ”மெமரி கார்டில்” பதிவு செய்யப்படுகிறது.
டிஜிட்டல் ஒளிப்பதிவு செய்ய உதவும் சென்சார் மற்றும் மெமரி கார்டில் பல வகைகள் உள்ளன.
டிஜிட்டல் ஒளிப்படத் தொழில்நுட்பமானது ஒளி உணர்திறன் வாய்ந்த ‘சென்சார்’ மற்றும் ‘ஃப்ரொக்கிராமிங்’கின் (programming) அடிப்படையில் இயங்குகிறது.
நாம் பார்க்கும் காட்சிகள் ஒளியாக காமிராவின் முன் பக்கத்தில் உள்ள ‘லென்ஸ்’ வழியாக ஊடுருவி வந்தடைகிறது.
சென்சார் (sensor), நவீன ‘சூரிய மின் தகடுகள்’ (solar) போலவே செயல்படுகிறது..சென்சார் பல ஆயிரம் ஒளி உணர்திறன் கொண்ட துகள்களால் (photo sensitive diodes) வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து உருவாகும் ஒளிமின் சக்தியானது ஒளிப்படத்தின் தனித்தனி பிக்சல்களாக உருப்பெறுகிறது.
சென்சார் சிலிகான் (silicon) செதில்களால் வடிவமைக்கப்பட்ட திடமான ஒளி உணர் சாதனமாகும்.
அதன் முக்கிய பாகங்கள்:
- வண்ண வடிகட்டி வரிசை (colour filter array)
- அதிர்வெண் வடிகட்டி (low pass filter)
- அகசிவப்பு வடிகட்டி (infra red filter)
- மின் சுற்றுகை (circuitry)
- பிக்சல் (pixel)
- மைக்ரோ லென்ஸ் (micro lens)
- பிளாக் பிக்சல் (black pixel)
சென்சார் இயக்கத்தை ‘ஃபோட்டோ லித்தோகிராஃபி’ என்று அறியலாம். சென்சாரானது சிறு சிறு மில்லியன் ஒளிக் கிணறுகளாக (light wells) உருவாக்கப்படுகிறது. அதுவே பிக்சல் என்றால் பிம்பத்தின் ஒரு பகுதி (picture element) ஆகும்.
ஒளியால் உருவாகும் மின்விசை சேர்வியை (charge) சிக்னலாக மாற்றப்பெறுவதற்கு முன் பெருக்கப்படுகிறது (amplified). அதன் பிறகே டிஜிட்டல் தகவல்களாக காமிராவில் சேமிக்கப்படுகிறது.
சென்சார் பாகங்களும் அவற்றின் செயல்பாடுகளும்