சினிமாவும் திரைப்பட விழாக்களும்

Aug 24 2016

Views: 2518
சினிமா என்பது அறிவியல் முன்னேற்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நவீன கலை வடிவம். சினிமா வளர்ச்சியின் பாதை என்றும் பெரும் சவால்கள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது.
சினிமாவின் தோற்றத்தை பின்னோக்கிப்பார்த்தால் அரிஸ்டாட்டிலின் ’ஒளிபுகும்’ தத்துவமே இதன் ஆரம்ப கட்டம் எனலாம். 1620 ல் ராபர்ட் பாய்லி உருவாக்கிய காமிரா அப்ஸ்குராவிலிருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து அடிப்படை புகைப்பட பதிவை டாக்ரே மற்றும் வில்லியம் ஃபாக்ஸ் தால்போட் 1839 ம் ஆண்டு உலகிற்கு அறிவித்தனர்.
பிறகு மை பிரிட்ஜ், எடிசன், லூமியர் சகோதரர்கள், ஜார்ஜ் ஈஸ்ட்மேன், இடெயின் மாரே ஆகியோரின் முயற்சியால் “சினிமா” பிறந்தது.
எட்வின். எஸ். போர்ட்டர், க்ரிஃபித், புடாவ்கின், சார்லி சாப்ளின், சேர்கி ஈஸ்சென்ஸ்டெயின் ஆகிய சிறந்த படைப்பாளிகள் மூலம் சினிமா தனித்தன்மை பெற்று “சினிமா மொழி” என்று ஒன்று தனியாக உருவானது.
சினிமா மெளனப்படங்களாக இருந்த 1927 ல் “ஜாஸ் சிங்கர்” என்ற திரைப்படத்திலிருந்து பேசும் படமாக மாறியது.
திரைப்பட கலை படைப்புகளுக்கு விருது வழங்கும் முறையான “ஆஸ்கர் விருது” 1929 ம் ஆண்டு முதன்முதலாக ஹாலிவுட் ரோஸ்வேலட் ஹோட்டலில் வழங்கப்பட்டது.
கடந்த 88 ஆண்டுகளாக சினிமாவின் பல பிரிவுகளில் “ஆஸ்கர் விருது” அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க திரைப்படங்களுக்கும் மற்றும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் விருதுகளை அளித்து கெளரவித்து வருகிறது.
சினிமா என்ற இந்த உன்னத கலை வடிவத்தை வளர்த்ததில் பெரும் பங்கு திரைப்பட விழாக்களையே சாரும்.
திரைப்பட விழாக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட நகரத்திலோ அல்லது ஒரு பகுதியில் உள்ள குறிப்பிட்ட ஒன்றிலோ அல்லது பல திரையரங்குகளிலோ சில குறிப்பிட்ட நாட்கள் தொடர்ந்து பல உலக திரைப்படங்களை திரையிடும் முறையாகும்.
இது திரைப்பட தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள், திரைப்பட ஆர்வலர்கள், மாணவர்கள் அனைவரும் சங்கமிக்கும் ஓர் உன்னத இடமுமாகும்.
இங்கே பல மொழிகள், பல நாடுகளிலிருந்து பல புதிய சிந்தனைகளும் புதிய தொழில்நுட்பங்களுடன் திரைப்படங்களாக திரையிடப்படுவது மட்டுமல்லாமல் திரைப்படம் முடிந்த பிறகு அத்திரைப்படத்தின் இயக்குநரோடு விவாதமும் செய்யலாம் என்பது சிறப்பம்சம்.
திரைப்பட விழாக்களிலேயே மிக பழமையானது “வெனிஸ்” திரைப்பட விழாவாகும். இத்திரைப்பட விழா 1932 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு “கான்” திரைப்பட விழா 1946 ம் ஆண்டிலும் பெர்லின் திரைப்பட விழா 1951 ம் ஆண்டும் தொடங்கப்பட்டது. இவை மூன்றும் மிகவும் பிரசித்தி பெற்ற உலகத் திரைப்பட விழாக்களாகும். ஆங்கிலத்தில் இத்திரைப்படவிழாக்களை “பிக் த்ரீ” என்பார்கள்.
போலந்து இயக்குநர் கிரிஸ்டேஸ் கிவ்லோஸ்கி தனது மூன்று திரைப்படங்களான ஒயிட், ப்ளூ, ரெட் ஆகிய படைப்புகளை ஒயிட் – “பெர்லின் திரைப்படவிழாவுக்காகவும்”, ப்ளூ – “வெனிஸ் திரைப்படவிழாவுக்காகவும்”, ரெட் – “கான் திரைப்படவிழாவுக்காகவும்”, என்று இத்திரைப்பட விழாக்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கினார்.
சான் பிரான்சிஸ்கோ உலகத் திரைப்பட விழாவானது அகிரா குரசவா மற்றும் சத்யஜித் ரே ஆகியோரின் திரைப்படங்களை அமெரிக்க மக்களிடையே பிரபலபடுத்திய பெருமையை பெற்றது.
சந்தோஷ் சிவன் இயக்கிய “டெரரிஸ்ட்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்தற்கு மிக முக்கிய காரணம் “கெய்ரோ” உலகத்திரைப்பட விழாவாகும்.
மாற்று முயற்சிகளுக்கென்றே (experimental films) பிரத்தியேகமாக செயல்படும் “அன் அர்பார்” திரைப்பட விழா 1962 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆசிய திரைப்படங்களுக்கென்றும், ஆப்பிரிக்கத்திரைப்படங்களுக்கென்றும், அனிமேஷன், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குழந்தைகள் திரைப்படங்களுக்கென்றும் தனித்தனியாகவும் திரைப்படவிழாக்கள் நடைபெறுகின்றன.
மாற்று சினிமாவை ஊக்குவிக்கும் வகையில் 1952ம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் இந்தியாவில் ஐ.எஃப்.எஃப்.ஐ (International Film Festival of India) உலகத் திரைப்பட விழா துவங்கப்பட்டது. சமீப வருடங்களில் இவ்விழா ஆண்டுதோறும் கோவாவில் நடைபெற்று வருகிறது
கேரளாவில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற உலகத் திரைப்பட விழாவான IFFK, சினிமா ஆர்வலர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. மற்றும் பல்வேறு உலகத்திரைப்பட விழாக்கள் இந்தியாவெங்கும் பல்வேறு அமைப்புகள் மூலமாக தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
இன்றளவில் உலகில் சுமார் 3000 திரைப்படவிழாக்கள் நடைபெறுகிறது.
  • மாண்ட்ரியல்
  • பூசான்
  • லோகர்னோ
  • டொராண்டோ
  • சிகாகோ
  • ஹெம்ப்டன்ஸ்
  • மியாமி
  • டர்பன்
  • கேம்ப்ரிட்ஜ்
  • எடின்பர்க்
  • கிஃபானி
  • ஃப்லெண்டர்ஸ்
  • கிஜான்
  • கார்லாவி வேரி
  • லண்டன்
  • மாஸ்கோ
  • மோலா டிஸ்ட்
  • நார்விஜியன்
  • ஒடன்ஸ்
  • பூலா
  • சான் சபாஸ்டியன்
  • த்ரீ காண்டினன்ட்ஸ்
  • லேடின் அமெரிக்கன்
  • ஹவானா
  • அட்லாண்டா
  • கொலம்பஸ்
  • டென்வர்
  • நியூ யார்க்
  • சியாட்டல்
  • டெல்யூரைட்
  • மார்டி க்ராஸ்
  • சிட்னி
ஆகியவை சில பழமையான உலகத் திரைப்பட விழாக்களாகும்.
ஒளிப்பதிவுத் துறைக்கு சிறப்பு அளிக்கும் வகையில் ‘கேமர் இமேஜ்’ உலகத்திரைப்பட விழா போலந்து நாட்டில் 1993ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஒரு வார காலத்திற்குநடத்தப்படும் இத்திரைப்பட விழாவில் முக்கிய போட்டிப்பிரிவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான முதல் பரிசாக ‘தங்க தவளை’ (golden frog), இரண்டாம் பரிசாக வெள்ளித் தவளை (silver frog) மற்றும் மூன்றாம் பரிசாக வெண்கல தவளை (bronze frog) என்ற பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் போட்டிப்பிரிவும் உள்ளது. அதில் கோல்டன், சில்வர், ப்ரான்ஸ் டாட்போல் (Golden, Silver, Bronze Tadpole) பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆவணத் திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவிற்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. மிக  முக்கியமாக, அறிமுக ஒளிப்பதிவாளர்களின் சிறந்த படைப்பிற்கும் பிரத்யேக போட்டிப் பிரிவுகள் உள்ளன.
கேமர் இமேஜ் திரைப்பட விழாவில் மியூசிக் விடியோ பிரிவிலும் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு விருது வழங்கப்படுவதோடு வாழ்நாள் சாதனையாளர் ‘கேமர் இமேஜ்’ விருதும் அளிக்கப்பட்டு ஒளிப்பதிவாளர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்.
முக்கிய போட்டிப் பிரிவான (main competition) கோல்டன் ஃப்ராக் விருது பெற்ற படைப்புகள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள்:
YEAR FILM CINEMATOGRAPHER
1993 THE PIANOSTURAT DRYBURGH
1994 WOYZECKTIBOR MATHE
1994 CROWS     –    ARTHUR REINHART
1995 THE SEVENTH ROOM –  PIOTR SOBOCINSKI
1996 SECRET & LIESDICK POPE
1997 CHARACTERROGIER STOFFERS
1998 CENTRAL STATIONWALTER CARVALHO
1999 ELIZABETHREMI ADEFARASIN
2000 AMOES PERROSRODRIGO PRIETO
2001 THE KING IS DANCINGGERALD SIMON
2002 EDI       –  KRYSZTOF PTAK
2002 ROAD TO PERDITIONCONROD HALL
2003 CITY OF GODCESAR CHARLONE
2004 VERA DRAKEDICK POPE
2005 FATELESSGYULA PADOS
2006 PAN’S LABYRINTHGUILLERMO NAVARRO
2007 THE DRIVING BELL AND THE BUTTERFLY  –   JANUSZ KAMINSKI
2008 SLUMDOG MILLIONAIREANTHONY DOD MANTLE
2009 LEBANON  –      GIORA BEJACH
2010 VENICE      –          ARTHUR REINHART
2011 IN DARKNESS    –    JOLANTA DYLEWSKA
2012 WAR WITCH   –      NICHOLAS BOLDUC
2013 IDA              –                 LUKASZ ZAL, RYSZARD LENCZEWSKI
2014 LEVIATHAN      MIKHAIL KRICHMAN
2015 CAROL        –        EDWARD LACHMAN
இன்று பல உலக திரைப்படங்கள் டி.வி.டி. வடிவில் மிக எளிதாகக் கிடைக்கின்றன. நம் வீட்டில் நாம் விரும்பும் நேரத்தில் எந்தப் படத்தையும் பார்க்கும் வாய்ப்பு இருக்கும்போதிலும், ஒரு திரைப்பட விழாவில் பெரியதிரையில் ஆயிரக்கணக்கான திரைப்பட ஆர்வலர்களுடன் உலகப்படைப்புகளை பார்த்துவிட்டு அதன் பிறகு அதைப்பற்றி உரையாடும் அனுபவம் அலாதியானது.
x
^