Panasonic GH5S :
 DSLR ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தின் புதிய உத்தி!

Feb 19 2018

Views: 3255

DSLR ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தின் அறிமுகத்திற்கு பின்னர், அதிக ரிசல்யூஷன் கொண்ட DSLR கேமராக்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் இண்டிப்பெண்டன்ட் படம் தயாரிப்பாளர்களுக்கும், ஆவணப்படம்தயாரிப்பிலும் மற்றும் மாணவர் குறும்படங்கள் தயாரிப்பதிலும் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

DSLR-ன் வீடியோக்களில் அதிக ரிசல்யூஷன் கொண்ட படங்களை பதிவு செய்தாலும், சுருக்கப்பட்ட படங்களாகவே (compressed image) பதிவு செய்கிறது. ஆகவே இந்த குறைபாட்டை மனதில் கொண்டு, பானாசோனிக் நிறுவனமானது பானாசோனிக் GH5 வகை கேமராக்களில் 10 பிட் வண்ணம் ஆழம் (10-bit color depth) பதிவு செய்யும் வகையில்மேம்படுத்தி இருக்கிறது. மேலும் வண்ண மாதிரி (chroma sampling), அளவில் 4:2:2 என்னும் விகிதத்தில் படங்களை பதிவு செய்யும் விதமாக தயாரித்திருக்கிறது. இந்த 4: 2: 2 விகிதம் வழக்கமான 8 பிட் வண்ணம் ஆழத்திற்கு மாறானது. ஆனாலும் மிகவும் குறைந்த ஒளியில் படங்களை பதிவு செய்யும் சூழ்நிலையில் ISO அளவில் மிக அளவை தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும். சோனி A7SII போன்ற முழு ஃப்ரேம் சென்சார் கேமராக்களில் வழங்கப்படும், தொழில் நுட்பமான மிகவும் குறைந்த ஓளியிலும் படமாக்க பயன்படும் அதிக ISO அளவைப் போல், மைக்ரோ ஃபோர் தேர்ட் (MFT) சென்சார் வகை கேமரக்களில் இல்லாதது ஒரு குறையே.

ஆனால், பானாசோனிக் GH5S ஆனது முந்தைய தயாரிப்பான பானாசோனிக் GH5-ன் அனைத்து அம்சங்களையும் கொண்டதுடன், கூடுதலாக குறைந்த ஒளியில் செயல்படும் விதமாக மேம்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கிறது.

GH5S ஆனது மிகவும் பயனுள்ள அம்சமான இரட்டை ISO (Dual ISO) என்னும் புதிய வகையை தயாரித்துள்ளது. இதுஅடிப்படையில் ஒவ்வொரு பிக்சல்களுக்கும் அடுத்ததாகவும், கெய்ன் ஆம்ப்-க்கு முன்னதாகவும் (gain amp) சரியாக இரண்டு மின்னணு சுற்றுகள் இருக்கும். ஒவ்வொரு ஒற்றை ISO-க்களில் இரண்டு நேட்டிவ் ISO-க்களை அனுமதிக்கிறது.

கருத்தளவில், இந்த முறையில் குறைந்த மற்றும் ஒற்றை நேட்டிவ் ISO கொண்ட கேமராக்களை விடவும், மிகத்துல்லியமான படங்களை மிகவும் குறைவாக ஒளி நிலையில் படம் பிடிக்க முடியும்.

வெறுமனே ISO அதிகரித்து, இரைச்சல் குறைப்பை சேர்ப்பதை விட, மாற்றாக இரட்டை நேட்டிவ் ISO-வை பயன்படுத்துவதன் மூலம், சென்சார்-ல் இருந்து குறைந்த ஒளி முன்னேற்றம் அடைந்து நேரடியாகவே அதிகரிக்கும்.

Lumix GH5S பற்றிய சிறப்பு என்னவென்றால் தானாக இயங்கும் இரட்டை ISO (Dual ISO)-வை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இது நேட்டிவ் ISO-வின் நிலையை படமாக்கும்பொழுது மாற்றிக்கொள்ள உதவுகிறது.

தொழில்நுட்ப குறிப்புகள்: Technical Specifications

  • 10.2MP, பல-அம்ச ஒளிரி (multi-aspect sensor)
  • அலைவடிவம், வெக்டார்ஸ்கொப் காட்சிகள்
  • இரட்டை நேட்டிவ் ISO
  • DCI 4K-ல், 60 FPS0, விரிவுபடுத்தப்பட்ட நிலையில் 240fps வரை
  • நேரம் குறியீடு உள்ளே/ வெளியே

மொழியாக்கம்

இளவரசன் தேவராஜன்
SICA-உறுப்பினர்.

x
^