Oct 02 2024
இரு கண்கள்…
***************
“நான் படப்பிடிப்புக்கு செல்லும் போது, CAMERA வை எடுத்து செல்வதில்லை… என் கண்ணனின் இரண்டு கண்களைத்தான் எடுத்து செல்கிறேன்..
அந்தக் கண்களுக்கு மட்டும் தான் அந்த ஆகாயத்தின் மறு பக்கத்தையும் பார்க்கத்தெறியும்…”
இயக்குனர்
பாரதிராஜா
இப்படி ஒரு கவித்துவமான ஒர் விமர்சனத்தை அவரின்கலைக்கு ஒளிப்பதிவாளருக்கு ஒரு இயக்குனர் உலகில் சொல்லியிருப்பாரா..!!!என தெரியவில்லை…!!!
அதை மெய்ப்பிக்கும் வகையில், பாரதிராஜாவுடன் ஒளிப்பதிவாளர் கண்ணன் தொடர்ந்து30 ம் மேற்பட்ட படங்களில் 40 வருடங்களாய்… உணர்வுடன் பயணித்திருக்கிறார்… என்றால் நம்ப முடியவில்லை .
என்றாலும் …
உண்மை அது தான்…!!!
B. கண்ணன் BSC.D. F. TECH
தரமணி திரைப்படக் கல்லூரியில் முறையான டிப்ளமோ பட்டம்…
அப்பா….தமிழ் சினிமாவின் 1960 களில் லெஜெண்ட் FILM DIRECTOR A. பீம் சிங்…
நடிகர் திலகம் சிவாஜி யை மட்டும் வைத்து “பா” வரிசை SUPER HIT படங்கள்… அதில் சில பாசமலர், படித்தாலமட்டும் போதுமா,பார் மகளே பார், பச்சை விளக்கு ,பாவ மன்னிப்பு போன்ற காவியங்கள்…
அண்ணன் -B. லெனின் 100 கணக்கான படங்களுக்கு எடிட்டர் …தேசிய விருது பெற்ற இயக்குனர்…
இவ்வளவு பிரமிப்பூட்டும் பின்னணி Profile இருந்தும், இதை பயன்படுத்தி இந்த பெயர்களில் குளிர் காயும் எண்ணம் சிறிதும் இன்றி தானாக முன்னேறிய திரை உலக சுயம்பு லிங்கம் ஒளிப்பதிவாளர் B. கண்ணன் அவர்கள்..
கண்ணன் ஒளிப்பதிவு செய்த முதல் திரைப்படம் “நதியை தேடி வந்த கடல்”….1979 ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் நிறைய ஆச்சரியங்கள் அடங்கி உள்ளது…. ஆம் இந்த படத்தின் கதாநாயகன் சரத்பாபு, கதாநாயகி ஜெ.ஜெயலலிதா…(அப்போது அரசியலில் ஈடுபட்ட ஜெ வுக்கு இது கடைசி படம்)…இசை இளையராஜா…
இந்த படத்தின் பின்னணி இசை கோர்ப்பின் போது, இதன் ஒளிப்பதிவை பார்த்த இளையராஜா, இயக்குனர் பாரதிராஜாவுக்கு கண்ணனை ஒளிப்பதிவாளராக அவரின் படத்தத்திற்கு பரிந்துரை செய்தார்….
அதாவது பாரதிராஜாவுக்கு இரண்டு புதிய கண்களை வழங்கியது,இளையராஜா தான்…. அதன் பிறகு…… தான்
கண்ணன் 1979-80 களில் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் (தெலுங்கு)Remake பதிப்பில் முதன் முதலாக இணைகிறார்…1st schedule ல் கண்ணன் ஷூட் செய்து எடுக்கப்பட்ட Rush print யை பாரதிராஜா தன்னுடைய உதவியாளர்களுடன் பார்த்து முடிக்கிறார்… ஓரமாக சென்று விவாதம் தொடர்கிறது..
எல்லாம் முடிந்து கண்ணனிடம் வருகிறார் ” கண்ணன் எல்லாம் ரொம்ப பிரமாதம்… கேமரா movement கள் இன்னும் நேர்த்தியான முறையில் இருந்தால் வெகு சிறப்பாக இருக்கும்…
மேலும் இது நம்ம படம் தான்..உங்களுக்கு தேவையான நேரத்தையும், சுதந்திரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்… பதட்டம் தவிர்த்து உங்கள் கூடுதல் அழகியலை எனக்கு கொடுக்கவும்… Dont worry, take your own time என பாரதி ராஜாவின் தோழமையான possitive approach எனக்கு பெரிய உற்சாகத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் கொடுத்தது என்கிறார் கண்ணன்….
தமிழில்”நிழல்கள்” அடுத்ததாக பணி புரிகிறேன்… என்னுடைய FRAME COMPOSSITION, LIGHTING METHODS இயக்குனருக்கு ரொம்ப பிடிக்கிறது… மேலும் பாரதிராஜா விடம் SHOT வைப்பதில் எந்த குழப்பமும் இன்றி மிக தெளிவாக இருப்பார்… கதையில் அவர் காட்டும் ஆர்வம், வெறித்தனமாக நடிகர்களிடம் நடிப்பு வாங்கும் விதம், சோர்வு அறியா தொடர் உழைப்பு என்னை மேலும் மேலும் ஆர்வம் கொள்ள வைத்தது…
அடுத்து “அலைகள்ஓய்வதில்லை”படம் முடிந்து வெள்ளி விழா கொண்டாடுகிறது.MGR படம் பார்த்து முடித்தவுடன் ,இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் யார்°? மிக சிறந்த VISUALS…. அவரை நான் காண வேண்டும் என்றவுடன்,,, பாரதிராஜவால் அறிமுகப்படுத்தப்ப டுகிறார்…. நம்ம பீம்சிங் அவர்களின்3 வது பையன் என்கிறார்…. சொன்னவுடன் அப்போ நன்றாகத்தானே செய்வார் என பாராட்டியிருக்கிறார்…. இது குறித்து ஒளிப்பதிவாளர் கண்ணன் சொல்லும் போது…'”குடும்பத்தில் லெஜெண்ட்ஸ் இருந்தால்,பாராட்டு கொஞ்சம் குறைவாகத்தான் வரும் என்கிறார்..இருப்பினும் என் தன் முயற்சிகளில் தான் மகிழ்வடைகிறேன் என்கிறார்…
இயக்குனர் பாரதிராஜாவுடன் வேலை செய்வது கொஞ்சம் கடினம் தான்.. பாய்ந்து வரும் அருவியின் வேகத்தைப் போன்றவர்… முன் கோபம், ஆளுமைத்திறன்,பரபரப்பான வேகம்,காட்சிகளின் கதாபாத்திரங்களின் உணர்வுகளை சுமந்துகொண்டு அங்கு மிங்கும் ஓடிக்கொண்டு இயங்கும் பாரதி ராஜா எனும் பொங்கி வரும் வெள்ளத்தை அமைதியாக தடுத்து ,தாங்கி சமப்படுத்தி உணர்வு சிதறாமல் கேமரா வில் பொறுமையாக view finder பார்த்து செதுக்கும் செல்லுலாய்டு சிற்பி தான் பி.கண்ணன்… அதனால் தான்30 படங்கள் பயணிக்க முடிகிறது…
கண்ணனின் ஒளிப்பதிவுக்கு சான்று “முதல் மரியாதை.”.. செல்வராஜ் ன் அற்புத கதைபின்னல்,இளையராஜாவின்
இசைவெள்ளம்..உணர்வுகளையும்,உணர்ச்சிகளையும் ,உறவுகளையும் ஒன்றோடு ஒன்று மோதி விட்டு விளையாடும் இயக்கம்…
இவை அனைத்தையும் நம் கண்களுக்கு காட்சி விருந்தாக்கி கொடுத்து இருப்பார் கண்ணன்… அருவிகள்,மலைத்தொடர், வயல் வெளிகள், சல சலக்கும் ஓடைகள், பரந்த வெளிகள், ஆறுகள், சுமை தாங்கி கற்கள், வானத்தை முட்டும் மரங்கள், பரிசல் ஓடை, சுதந்திரக் குருவிகள்….
சுதந்திர மில்லா ஊர் பெரியவர்…. அவர் மனதில் முதல் காதலை பதிக்கும் குயிலு,
கள்ளம் கபட மில்லா காதலர்கள் என தன் அழகிய கேமரா மூலம் அழகியலை மட்டுமல்ல கிராமத்து இயற்கை வயல் வெளி பச்சை வாசனையை நம் நாசியில் நுகர வைத்த ஓளிக் கடவுள் ஒளிப்பதிவாளர் திரு பி.கண்ணன் அவர்கள்…. இது மிகை அல்ல திரை அரங்கில் சுவர் முழுவதும் ஈர வாசனையை உங்கள் புலன்களுக்கு உணர்த்தியவர்….
“கடலோரக்கவிதைகள்” கன்னியாகுமரி மாவட்டம்…. “முட்டம்”கடற்கரை ஒர கிராமத்தை இந்த படத்திற்கு பிறகு எத்தனையோ?படங்களில் இன்னமும் காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்… ஆனால் இன்னமும் மக்கள் மனதில் அதாவது, அந்த முட்டம் ஊரில் சின்னப்பதாஸும்-ஜெனிபர் டீச்சர் ம் மட்டும் தான் வாழ்கிறார்கள்…. மக்கள் மனதிலும்…
அதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் கண்ணன் மாறுபட்ட கோணங்களில் அந்த ஊரின் அழகை அள்ளிப்பருகியிருப்பார்… கடலும் கடல் சார்ந்த இடமும் இவ்வளவு அழகானதா என பரவசப்பட வைத்து இருப்பார்…
இயக்குனர் பாரதிராஜாவின் இணை இயக்குனர் மற்றும் இயக்குனர் வீரசிங்கம் அவர்கள் கண்ணன் குறித்த பதிவுகளை இங்கு பதிவு செய்கிறார்….””எங்களுக்கு VIEW FINDER யை பார்த்து வேலை செய்யும் உரிமையை கொடுத்து இருந்தார்…. தன் கேமரா அதில் அடுத்து அவர் எடுக்க போகும் SHOT பற்றி மட்டும் சிந்திப் பார்….நான் ஒரு திறன் வாய்ந்த குதிரை…. எனக்கான களத்தில் என் சுயம் பாதிக்கா நல்ஆளுமை களை எப்போதும் வரவேற்கிறேன்… என்பார்… மேலும் நான் கேமரா குறித்த எந்த கேள்விகளை களை Theoritical ஆககேட்டாலும்… உடனே VERY PRACTICAL ஆக கேமரா மூலமாகவே எனக்கு பதில் சொல்லிஅதை புரியவைப்பார்…..
மேலும் பாரதி ராஜா சொல்கிறார் “அவன் என்னைப்பற்றி நன்கு தெரிந்து வைத்து இருக்கிறான்…என்னுயிர் தோழன் போன்ற ஒரு குப்பத்து கதைக்கான ஒளிப்பதிவையும்….
ஒரு கடற்கரையோர காதல் கதையையும்…… கிராமத்து காதல் கதையையும்…. பிரதிபலிக்கும் உணர்வுகளுக்கும் அதனதன் பாணியில் ஒளிப்பதிவு செய்ய தெரிந்து வைத்து இருந்தான்…
எல்லாவற்றுக்கும் மேலாக நான்”நாடோடித் தென்றல்” என்ற period film செய்தேன்…. அதற்க்கான அழகியல், கோணம், லைட்டிங் ஆகியவற்றை மிகப் பிரமாதமாக செய்திருந்தான்…
என்னுடன் 40 ஆண்டுகள் பயணித்தவன்…. என்னை நன்றாக ஷூட்டிங் ஸ்பாட் ல் புரிந்து வேலை செய்பவன்…. என் வாழ்வின் பெரும் பங்கை அவனுடன் கழித்திருக்கிறேன்..
எனக்கான என் பெயரும் புகழும் அவனுக்கு உரியது…” என கண்ணீர் மல்க கூறுகிறார்…
இயக்குனருடன்
முக்கிய படைப்புகள்
*******************
நிழல்கள்…
டிக்.. டிக்… டிக்…
காதல் ஓவியம்…
முதல் மரியாதை…
ஒரு கைதியின் டைரி…
அலைகள் ஓய்வதில்லை
நாடோடி தென்றல்
கிழக்கு சீமையிலே…
கருத்தம்மா…
இன்று நம்மிடம் அவர் இல்லை…
அவரின் பதிவுகள் அவரை நினைவு படுத்தாமலில்லை…..
நினைவுகளுடன்
*****************
GA. சிவ சுந்தர்