
ஒரு பத்து பதினைந்து வருடங்கள் முன்னர் பிளக்ஸ் அச்சுமுறை என்று ஒரு புதிய தொழில்நுட்பம் நம் நாட்டில் பரவலாக அறிமுகமானது. அந்த அச்சு யந்திரங்களின் விற்பனை பிரதிநிதிகள் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து எங்கும் அதை பரப்பினர். பெட்டிக்கடைகளை விட அதிகரித்தன பிளக்ஸ் யந்திரங்கள். நூறடி நீளமானாலும் பத்தடி உயரத்திற்கு நிமிடத்திற்கு பலப்பல சதுர அடிகளாக பிளாஸ்டிக் பேனர்கள் துப்பி எறியப்பட்டன. கடைகள் எங்கும் நவீன பெயர்ப்பலகைகள். வீதியெங்கும் ராட்சச பேனர்கள்… […]