‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்’ தமிழ் இணையதளம் மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கான ‘ SICA நாட்காட்டியும் ’, சென்னை, இந்தோ – ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் திரு. பாரதிராஜாவும் திரு.கமல்ஹாசன் அவர்களும் நாட்காட்டியை வெளியிட்டும், திரு.வைரமுத்து அவர்கள் இணையதளத்தை துவங்கி வைத்தும் சிறப்புரை ஆற்றினார்கள். நமது சங்க நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

SONY நிறுவனம் தமது டிஜிட்டல் சினிமா கேமரா PMW- F55 மற்றும் RAW RECORDER AXS- R7, ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, சென்னை பிரசாத் லேபில், நமது ‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின்’ உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தியது. இதில் நமது சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.
ARRI நிறுவனம் தமது புதிய கருவிகளை, தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, ஹைதராபாத் ரேடிசன் ஓட்டலில், உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தியது. இதில் நமது சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.
ARRI நிறுவனம் தமது புதிய கருவிகளை, தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, சென்னை பிரசாத் லேபில், நமது ‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின்’ உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தியது. இதில் நமது சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.
நமது ‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தில்’ புதிய உறுப்பினராக சேர விருப்பம் தெரிவிப்போருக்கான பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது. அதன் பின் நடத்தப்படும், நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நமது சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ஒளிப்பதிவாளர்கள் திரு.கிச்சாஸ், திரு.சி.ஜே.ராஜ்குமார் மற்றும் திரு.அழகிய மணவாளன் ஆகியோர் பயிற்சிப்பட்டறையை நடத்தினார்கள்.