முதல் பொதுக்குழுக் கூட்டம் – 14TH பிப்ரவரி 2016

நமது ‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின்’ முதல் பொதுக்குழுக் கூட்டம், பிப்ரவரி (2016) மாதம் 14 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சென்னை தியாயகராய நகரில் கூட்டப்பட்டது. இதில், நமது சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு, மிக முக்கியமான முடிவுகளை ‘குரல் வாக்கெடுப்பு’ மூலம் நிறைவேற்றினார்கள்.

மருத்துவ முகாம்

உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம், 2016 ஏப்ரல் 10ம் தேதி சாலிகிராமம், ட்ரைடெண்ட் மருத்துவ மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதய நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டன.