புதிய அணியின் முதல் நாள்

ஒளிப்பதிவாளர் PC.ஸ்ரீராம் தலைமையிலான நடுநிலை அணியின் 19 வெற்றியாளர்களும் ஜனவரி 12ம் தேதி ஒரு எளிய நிகழ்வில் SICA அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக்கொண்டனர். முந்தைய நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளை ஒப்படைத்தனர்.

தேர்தல் தருணங்கள்- 2016

எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு, மீண்டும் 2016- ஜனவரி 10ம் தேதியன்று SICA சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. பிரபல ஒளிப்பதிவாளர் PC.ஸ்ரீராம் தலைமையில், B.கண்ணன், ராஜீவ்மேனன் போன்றோர் பங்கேற்பில் ஒன்றுதிரண்ட அணி 19 பதவிகளில் வென்று வெற்றிபெற்றது. ஜனவரி 12ம் தேதி, புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.