நீங்கா புகழ்பெற்ற, அற்புதமான திரைப்படங்களை உருவாக்கிட அரும்பாடுபடும் எண்ணற்ற உழைப்பாளிகளின் முயற்சிகளை அங்கீகரித்து கௌரவப்படுத்துவது ஒரு தலைசிறந்த செயல்பாடு. SICA ஒவ்வொரு ஆண்டும், அவ்வாறான கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கி அவர்களைப் பெருமைப்படுத்தி வருகிறது. இதற்கான முன்னெடுப்பைச் செய்த SICA உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரை உலகிலிருந்து பிரபல நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்ட SICA விருது வழங்கும் விழா 23 நவம்பர் 2003 அன்று, சென்னை, நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட்டது. இதில், இந்தி நடிகர் சல்மான்கான் மேடையில் தோன்றி நடனமாடியது குறிப்பிடத்தக்கது. அனைத்து இந்திய மொழிகளிலும் SICA உறுப்பினர்கள் பணிபுரிவதால், இந்திய அளவில் எல்லா மொழிகளிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.வருடந்தோறும் வழங்கப்படும் பெருமைக்குரிய SICA விருதுகள் 2015 ஜனவரியில் மிகப்பிரம்மாண்டமான முறையில் மலேசியாவில் நடத்தப்பட்டது.
x
^