பாலு மகேந்திரா

திரு. பாலுமகேந்திரா என அழைக்கப்படும், பாலநாதன் பெஞ்மின் மகேந்திரன் (20 May 1939 – 13 February 2014), தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இயக்குநர், கதாசிரியர் மற்றும் படத்தொகுப்பாளர். இலங்கைத் தமிழ்க் குடும்பத்தில் பிறந்த அவர், இளம் வயதிலேயே இலக்கியம் மற்றும் சினிமாவில் அதிக நாட்டம் கொண்டவர். டேவிட் லீன் அவர்களின் The Bridge on the River Kwai (1957) படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் அவர் நேரில் பார்த்த பின், சினிமாவின் மீது காதலானார். லண்டன் யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சில காலம் டிராப்ட்ஸ்மேன் வேலை செய்தவர், அதன் பின் ஃபிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (FTII)வில் அவர் சேர்ந்து ஒளிப்பதிவுக் கலையைப் பயின்றார். 1970ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்கிய அவர், 10 ஆண்டுகளிலேயே, சினிமாத் துறையில் அவருக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துப் பெரும்புகழ் ஈட்டினார்.

கன்னடப்படம் கோகிலாவில் (1977) துவங்கி, அனைத்து தென்னக மொழிகளிலும், இந்தியிலும் அவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார். தமிழ்ப் படங்களில் முதன்முதலாக யதார்த்தபாணியை அவர்தான் உருவாக்கினார். 2007ல் அவர் படப்பிடிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பிற்காக ஒரு பயிற்சிப்பள்ளியை நிறுவினார். சில காலம் உடல் நலம் குன்றி, 2014ல் மாரடைப்பால் காலமானார். அவரின் மாணவர்கள் பலரும் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளமாக உருவாகியிருக்கின்றனர்.

சிக்கனத்துக்குப் பெயர் போன அவர், தன் படங்களை அவரே எழுதி, படம்பிடித்து, இயக்கி, தொகுப்பார். 6 தேசிய விருதுகள், 3 தென்னக ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர மாநில விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

பணிபுரிந்த திரைப்படங்கள்

கோகிலா (1977; கன்னட படம்)
அழியாத கோலங்கள் (1979)
மூடு பனி (1980)
மூன்றாம் பிறை (1982)
ஒலங்கள் (1982; மலையாள படம்)
ஊமக்குயில் (1983; மலையாள படம்)
சத்மா (1983; இந்தி படம்)
நீங்கள் கேட்டவை (1984)
உன் கண்ணொல்நீர் வழிந்தால் (1985)
யாத்திரை (1985; மலையாள படம்)
நிரீக்ஷனா (1982; தெலுங்கு படம்)
ரெட்டை வால் குருவி (1987)
வீடு (1988)
சந்தியா ராகம் (1989)
வண்ண வண்ண பூக்கள் (1992)
மறுபடியும் (1993)
சதி லீலாவதி (1995)
அர் ஏக் பிரேம் கஹானி (1996; இந்தி படம்)
ராமன் அப்துல்லா (1997)
என் இனிய பொன்நிலவே (2001)
ஜூலி கணபதி (2003)
அது ஒரு கனா காலம் (2005)
தலைமுறைகள் (2013)

x
^