கலைமாமணி மாருதி ராவ்

திரு. S மாருதி ராவ் 25-04-1921 அன்று தஞ்சாவூரில் பிறந்தார். பள்ளி நாட்களிலிருந்தே அவர் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டவர். பள்ளிக்கூடத்திற்கு கேமராவை எடுத்து சென்று, அவர் ரசிக்கும் காட்சிகளையெல்லாம் படமெடுத்தவர்.

அவரது அண்டை வீட்டுக்காரரான, ’ப்ளாஷ்’ பத்திரிக்கையின் ஆசிரியர், திரு NC பிள்ளை, மாருதி ராவின் புகைப்பட ஆர்வத்தை கண்டு, சினிமாவில் சேர விருப்பமிருக்கிறதா என்று வினவினார். பின்னர், அவரது பெற்றோரின் ஒப்புதலைப் பெற்று 1940-ஆம் ஆண்டு பிரகஜோதி பிலிம்ஸின் தயாரிப்பில், தெலுங்கு படமான சூடாமணியில் ஒளிப்பதிவு உதவியாளராகச் சேர்ந்தார். இப்படத்தின் கதாநாயகியாக, பிரபல இந்தி நடிகை ரேகாவின் தாயார் புஷ்பவல்லி நடித்தார். படத்தின் தயாரிப்பாளர் திரு ராஜா சாண்டோ, ஒளிப்பதிவாளர். திரு மாமா ஷிண்டே!

நாதஸ்வர வித்வான் திரு ராஜரத்தினம் பிள்ளை, கதாநாயகனாக நடிக்க, எல்லிஸ் ஆர் டங்கன் மற்றும் WJ மொய்லம் ஆகியோர் இயக்கிய கவி காளமேகம் எனும் படத்தில் அவர் அடுத்து பணிபுரிந்தார். அதன் ஒளிப்பதிவாளர் திரு மா.ரஹ்மான். பிரபல ஒளிப்பதிவாளர் திரு மார்க்ஸ் பார்ட்லி அவரிடமும் உதவியாளராக மாருதி ராவ் பணியாற்றினார். பின்பு கிண்டியிலுள்ள வேல் பிக்சர்ஸ் தயாரித்து, பானுமதி கதாநாயகியாக நடித்த ’பக்த மாலா’வில் பணியாற்றினார். அவரது ஈடுபாடு மிக்க, சிறப்பான வேலையைப் பார்த்து வியந்த, அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அவருக்கு மிட்செல் கேமராவை இயக்கும் பொறுப்பளித்து முதன்மை உதவியாளராக மாற்றினார்.

இரண்டாம் உலகப்போர்ச் சூழலில், கொஞ்ச நாட்கள் சொந்த ஊருக்கே திரும்பினார் ராவ். மீண்டும் சென்னை திரும்பியபோது, பிரகதி ஸ்டூடியோவில் இணைந்து, AVM தயாரித்த ஸ்ரீவள்ளி படத்தின் புகைப்படக்காரராக பணியாற்றினார். திரு RN நாகேந்திரராவ் இயக்கிய AVMன் மகாத்மா கபீர் எனும் படத்தில் புகைப்படக்காரராக பணியாற்றிய போது, அப்படத்தில் பணியாற்றிய வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் அவசரமாக ஊர் திரும்ப நேர்ந்தது. ஆகவே, அந்தப் படத்தை முடித்துக்கொடுக்கும் பொறுப்பு மாருதி ராவுக்குக் கிடைத்தது. அதன் பின் ’ஓர் இரவு’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளரானார் ராவ்! P நீலகண்டன் இயக்கிய அந்தப் படத்தின் ஒளிப்பதிவு மிகவும் பாராட்டப்பட்டது, அதனால் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.
தொடர்ந்து அவர் 34 தமிழ், 13 இந்தி, 8 கன்னடம் மற்றும் 5 தெலுங்குப் படங்களில் வேலை செய்தார். ஓர் இரவு, அந்த நாள், பராசக்தி, மேஜர் சந்திரகாந்த், அன்பே வா, அதே கண்கள் மற்றும் ரங்கநாயகி போன்ற படங்களுக்காக பெரும் பாராட்டுகளைப் பெற்றார். மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ. ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களுடன் அவர் வேலை செய்துள்ளார். சிவாஜி கணேசன், எஸ்.வி.சுப்பையா, வைஜெயந்திமாலா, ஹேமமாலினி போன்ற புகழ்பெற்ற நடிகர்களுக்கு சோதனைக்காட்சிகள் எடுத்தவர் மாருதி ராவ். புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனக்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். தனித்துவமான ஒளியமைப்பு, மற்றும் காட்சியமைப்புகளுக்காக மாருதி ராவ் தனக்கான தனியிடத்தை உருவாக்கியவர்.

பல தொலைக்காட்சித் தொடர்களையும், செய்திப் படங்களையும் தயாரித்துள்ளார். TNPSC உறுப்பினராகவும், திரைப்பட கல்லூரியின் தேர்வுகுழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

பணிபுரிந்த திரைப்படங்கள்

1952 : பராசக்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் சிவாஜி கணேசனின் முதல் படம். வெள்ளி விழா கொண்டடியது

1953 : பெத்தர கண்ணப்பா, கன்னடம், ராஜ்குமார் முதல் படம். காளஹஸ்தி மஹாத்யம் – தெலுங்கு

1954 : சிவ பக்த, ஹிந்தி. அந்த நாள், தமிழ், மத்திய அரசாங்க விருது பெற்றது

1956 : குலதெய்வம்,தமிழ் வெள்ளி விழா கொண்டாடியது ஹம் பாஞ்ச் ஏக் டால் கே, ஹிந்தி, மத்திய அரசாங்க விருது பெற்றது

1957 : பாபி – ஹிந்தி, பொன் விழா கொண்டாடியது. பர்கா, ஹிந்தி

1958 : உங்கள் நண்பன், தமிழ், போலிஸ் டாக்குமெண்ட்ரி

1959 : மாமியார் மெச்சிய மருமகள், தமிழ்.

1960 : தெய்வ பிறவி, தமிழ், மத்திய அரசாங்க விருது பெற்றது

1961 : ஷாதி, சுஹாக் சிந்தூர்

1962 : அன்னை, தமிழ், மத்திய அரசாங்க விருது பெற்றது

1963 : குங்குமம், தமிழ்

1964 : வாழ்க்கை வாழ்வதற்கே, சர்வர் சுந்தர்ம், தமிழ்

1965 : குழந்தையும் தெய்வமும் தமிழ் மத்திய அரசாங்க விருது பெற்றது , மேஜர் சந்திரகாந்த்

1966 : அன்பே வா, தமிழ், முதல் கலர் படம், வெள்ளி விழா, மைன் சுந்தர் ஹூன்,மான் மௌஜி, ஹிந்தி

1967 : அதே கண்கள் – தமிழ், கலர் அவே கல்லு, தெலுங்கு, கலர்

1968 : தோ கலியாண், ஹிந்தி, அநாதை ஆனந்தன், தமிழ்

1970 : எங்க மாமா, எங்கள் தங்கம்

1971 ` : புதிய வாழ்க்கை, இருளும் ஒலியும், ரங்க ராட்டினம், தமிழ், இத்தரு அம்மாயிலு – தெலுங்கு

1972 : தங்க துரை, தமிழ், புட்திநில்லு மெட்டிநில்லு, தெலுங்கு

1973 : பொன்நூஞ்சல், தமிழ்

1974 : பத்து மாத பந்தம், கலியுக கண்ணன், தமிழ்

1975 : காரோட்டி கண்ணன், தமிழ், நோமு, தெலுங்கு, சில்வர் ஜூப்ளி, பூஜா, தெலுங்கு

1976 : ஜைசே கோ தைசா, ஷாண்தார், ஹிந்தி, வாழ்ந்து காட்டிகிறேன், வாழ்வு என் பக்கம், தமிழ்

1977 :: பேர் சொல்ல ஒரு பிள்ளை, இளைய தலைமுறை, என்ன தவம் செய்தேன், தமிழ்

1978 “ “சக்கரவர்த்தி,படுவரல்லி பந்தவரு,” கன்னடம்

1979 : தர்ம செரை , கன்னடம்“Dharma Serai,” Kannada

1980 : வடமாலை, போட்டோகிராபி மற்றும் டைரக்ஷ்ன் – மாநில அரசாங்கம் விருது பெற்றது

1982 : ரங்கநாயகி, கன்னட சினிமாஸ்கோப்

1983 : ருநமுக்தலு,கன்னடம்

1986 : பால் ஒந்து வியாலி, கன்னடம்

1987 : தாயே நீயே துணை, காதல் என்பது எது வரை, தமிழ்

1989 : மசநத ஹூவு, கன்னடம், மாநில அரசாங்கம் விருது பெற்றது.

1990 : சிறையில் பூத்த சின்ன மலர், தமிழ்

1995 : நிலம்பார்க்கும் நிலா, பாராட்டு விழா, தமிழ் சினிமாஸ்கோப்


விஜயம் செய்த நாடுகள்

கிழக்கு ஜெர்மனியில்: லெயிஸீக் விழா, Orwo தொழிற்சாலை அரசு விருந்தினராக இரு முறை விஜயம்.

இங்கிலாந்து: லண்டனில் உள்ள கோடாக் மற்றும் ஹாரோ படம் தொழிற்சாலைகள் அவர்களின் அழைப்பை ஏற்று
ஆர்தர் ரேங்க் மற்றும் சினிசிட்டா ஸ்டுடியோஸ், விஜயம்.

இத்தாலி : டெக்னிகலர் கார்ப்பரேஷன்

ஐரோப்பா: பாரிஸ் – பிரான்ஸ், ஜெனீவா – சுவிச்சர்லாந்து, ஹாம்பர்க், ஜெர்மனி மற்றும் பெர்லின் – மேற்கு ஜெர்மனி

பிற இடங்கள் : கெய்ரோ மற்றும் பெய்ரூட்டின்

தொலைக்காட்சி தொடரகளில் சீரியலில் புகைப்படம் இயக்குநராக

அந்தப்புரம் – வரலாற்று,
மரியாதை ராமன், அன்புள்ள அம்மா,
அரும்புகள் & ஜன்னல் – டிடி க்கான டெலிபிலீம்ஸூக்காக,
சுமைதாங்கிகள்,
சின்ன சாம்பு, நிஜமான உயரங்கள், தமிழ் தொடர்களில்
காடு சொல்லும் கதைகள்- சமூக வனவியல் ஆவணப்படம் – தயாரிப்பு, டைரக்ஷன், , புகைப்படம்,
மீன்வளர்ப்பு – உவர் நீர் மத்திய நிறுவனம் 50 நிமிடம் ஆவணப்படம்

பிற நடவடிக்கைகள்: உறுப்பினர், 1937 முதல் சென்னை தன்னார்வ புகைப்படம் சமூகம்
மேலும் புகைப்படம் துறையில் பல விருதுகளை வென்றார்

x
^