N.K.Viswanathan

TRIBUTE: SHRI. N.K.VISWANATHAN CINEMATOGRAPHER / DIRECTOR Veteran Cinematographer NK Viswanathan was popular for his works as Cinematographer for films like ‘Kalyanaraaman’. He holds the record of doing more than100 feature films which is a remarkable benchmark in the history of film industry in any part of the globe. A native [...]

Marcus Bartley

MASTER CINEMATOGRAPHER MARCUS BARTLEY’S CENTENERY (1917-2017) Marcus Bartley was India’s foremost cinematographer, whose poetic use of light illuminated early films made before and after India’s Independence. His images were bench mark for South Indian Film Industry and inspired generations of cinematographers to look up to his body of works as reference. Bartley [...]

கலைமாமணி மாருதி ராவ்

“எதுவுமே இல்லாத போது, எல்லாவற்றையும் அப்பா நிகழ்த்திக் காட்டினார்…” ஒளிப்பதிவாளார் மாருதி ராவின் சாதனைகளை பட்டியலிடுகிறார்அவரது மகன். வாலி படத்தில், ஒரு அஜீத்தின் தோள் மீது, இன்னொரு அஜீத் அமர்ந்து சகோதர பாசத்தைக் காட்டினார். ஒரு சரத்குமாரின் கண்ணீரை, இன்னொருசரத்குமார் ஐயா படத்தில் துடைத்தார். ஒரு பிரசாந்த், இன்னொரு பிரசாந்த்தை ஜீன்ஸ் படத்தில் கட்டியணைத்தார். இந்தக் காட்சிகளை எல்லாம்நாம் மெய்மறந்து ரசித்தோம். வளர்ந்திருக்கும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி இது போல் எண்ணற்ற சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால், ஒரு சிவாஜி கணேசனுக்கு நேர் பின்னால், பத்தடி தூரத்திலிருந்து இன்னொரு சிவாஜி கணேசன் நடந்து வருவதும், அமர்ந்திருக்கும்முந்தைய சிவாஜி கணேசனை இந்த சிவாஜி கணேசன் தன் கைகளால் நெறிப்பதும் உத்தம்புத்திரன் படத்தில் எப்படி சாத்தியமாயிற்று? குழந்தையும் தெய்வமும் படத்தில், ஒரு குட்டி பத்மினிக்கு, இன்னொரு குட்டி பத்மினி முத்தமிட்ட போது, முதல் குட்டி பத்மினியின் கன்னத்தில் எப்படி குழிவிழுந்தது.? பானுமதி ரயிலில் செல்லும் போது, மனசாட்சியாக இன்னொரு பானுமதி எதிரே வந்து அன்னை படத்தில் பாடுகிறார், பாடல் முடிவில்முதல் பானுமதி, தன் கைகளால் மனசாட்சி பானுமதியை அழித்தது எப்படி?   இது போல் பட்டியலிடவும் எண்ணற்றக் காட்சிகள் இதே தமிழ் சினிமாவில் கொட்டிக்கிடக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்,தொழில்நுட்பம் கொஞ்சம் கூட வளர்ந்திராத, அறிமுகமாகாத காலகட்டத்தில்… அதுவும் கருப்பு வெள்ளை சினிமா காலத்தில்… இதையெல்லாம்தமிழ்ச் சினிமா சாதித்திருக்கிறது என்பதுதான். எப்படி முடிந்தது? ஒளிப்பதிவாளர்கள்தான் காரணம், அவர்களுள் ஒருவர்தான் பிரபலஒளிப்பதிவாளரான மாருதி ராவ். அவரது கைவண்ணம்தான் மேலே குறிப்பிட்ட காட்சிகளும், இன்னும் குறிப்பிடப்படாமல் இருக்கும் பல படங்களும். அவரது மறைவுக்கு பிறகும் இந்த ஜாலங்களை எப்படி நிகழ்த்தினார் என்பது சராசரி ரசிகனுக்கு புரிபடாமலேயே இருக்கிறது. அதைவிளக்குகிறார் டாக்டர் மகேந்திரன். மாருதி ராவின் மகனான இவர் சென்னையைச் சேர்ந்த புகழ் பெற்ற இ.என்.டி மருத்துவர்களில் ஒருவர். தன்அப்பா, தன்னிடம் பகிர்ந்து கொண்ட நுணுக்கங்களை உற்சாகத்துடன் விவரிக்க ஆரம்பித்தார் டாக்டர் மகேந்திரன்.   அப்போதைய அற்புதமான கற்பனை வளத்தின் பலன்தான், அந்தப் பிரமிக்க வைக்கும் காட்சிகள். இப்போதைய தரத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது,அந்நாளைய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள், கேமராக்களை மட்டுமே நம்பி படம் எடுக்கவில்லை. காட்சி, சூழ்நிலை, ஒளியமைப்பு, தன் சொந்தக்கற்பனை என்று மனதையும், மூளையையும் கசக்கி, கேமராவுக்குள் புகுத்தி படம் எடுத்திருக்கிறார்கள்.   மேலே சொன்ன உத்தமபுத்திரன் படக்காட்சி ஒளிப்பதிவாளர் வின்சென்டின் கைவண்ணம். குழந்தையும் தெய்வமும், அன்னை படக்காட்சிகள் என்தந்தையாரின் தலைமைச் செயலகத்தில் உருவான சாமர்த்தியம்.   பள்ளி நாட்களிலிருந்தே அப்பாவுக்கு கேமரா மீது தீராக் காதல். சக மாணவர்களையும், சகோதர, சகோதரிகளையும், தனக்கு கிடைத்த கேமரா மூலம்படமெடுத்து மகிழ்விப்பார். பள்ளியும், மற்ற பிற அமைப்புகளும் நடத்திய புகைப்படப் போட்டிகளில் பங்கேற்று பரிசும் வாங்கியிருக்கிறார்.அப்பாவின் பக்கத்து வீட்டில் இருந்தவர், பத்திரிக்கை ஒன்றில் ஆசிரியராக இருந்தவர். அவர் மூலமாக அடையாரில் இருந்த கார்த்திகா பிலிம்ஸ்நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளராக சேர்ந்தார். அவர்கள் தயாரித்த சூடாமணி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் உதவியாளராகப் பணியாற்றினர்.அடுத்தது கவி காளமேகம் படத்தில் ஒளிப்பதிவாளர் எல்லிஸ் ஆர். டங்கனுக்கு சீடரானார்.   வேல் பிக்சர்ஸ் தயாரித்த பக்திமாலா என்ற தெலுங்குப் படத்திற்கு பம்பாய் ஒளிப்பதிவாளர் ஒருவரை நியமித்திருந்தார்கள். அப்பாவுக்கு மராத்திதெரியும் என்பதால் அவருக்கு உதவியாளராகப் பொறுப்பேற்றார். அந்த நாட்களில் பாடல் காட்சியில் நடிக்கும் நடிகரே அந்தப் பாடலை பாடவேண்டும். அவர் பாடும் போது, கூடவே இசைக் குழுவினர் தத்தமது கருவிகளை இசைப்பார்கள். இதை அப்படியே ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.ஆமாம், நடிகருக்கு மேலே ஒரு மைக் தொங்கிக் கொண்டிருக்கும். எனவே அந்த மைக்கோ அல்லது அதன் நிழலோ பிரேமில் விழாதபடிஎச்சரிக்கையாகப் படம் எடுக்க வேண்டும். இசைக் குழுவினருக்கு தனி மைக். நடிகர் சத்தமாய்ப் பாடினால்தான் அவரிடமிருந்து சற்றுத்தொலைவிலிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு அந்தப் பாடல் காதில் விழும். இதனால், நடிகரின் உதட்டசைவு பாடலுக்கு பொருத்தமாக இருப்பதையும்உணர முடியும்.   இதுபோன்ற காட்சிக்காக நான்கு லென்ஸுகள் பொருத்தப்பட்ட கேமராவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 40,50,75,100 என போகல்லென்த் கொண்டலென்ஸுகள் அவை. இதன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளை பிறகு லாங் ஷாட், மிட் ஷாட், க்ளோஸ் அப் என்று பாடல் வரியின்பொருளுக்கேற்பவும், நடிகரின் முகபாவத்துக்குத் தகுந்தாற் போலவும், காட்சியின் சூழலுக்கு ஏற்பவும் எடிட் செய்து, அந்தப் பாடல் காட்சியைமுழுமையாக்குவார்கள்.   காரைக்குடியில் ஏவிஎம் செட்டியாருடைய பிரகதி ஸ்டுடியோ சார்பாக ஸ்ரீவள்ளி என்ற கன்னடப் படம் தயாரானது. அதற்கு அப்பா ஸ்டில் படங்கள்எடுத்தார். ஒரு ஜெர்மன் ஒளிப்பதிவாளர் கேமராவைக் கையாண்டார். ஆனால், பாதியில் அந்த ஜெர்மன்காரர், தன் ஊரைப் பார்த்துப் போய்விடவே,நிறுவனம் திகைத்தது. உடனே அப்படத்தின் இயக்குநரான ராகவேந்திர ராவ் அப்பாவிடம் அந்தப் பணியைத் தொடரச் சொல்லி பொறுப்பளித்தார்.அப்பா, அந்த ஜெர்மன்காரருக்குப் பெரிய பெருமை தேடித்தரும் வகையில் படத்தை ஒளிப்பதிவு செய்து, தன் திறமையையும் நிரூபித்தார். ஏவிஎம்சென்னைக்குத் குடிபெயர்ந்த போது இரண்டாவது கேமரா யூனிட்டில் அப்பா, கேமராமேனாக பணி உயர்வு பெற்றார். இங்கே அவர்களது முதல் படம்ஓர் இரவு. அப்பாவின் கேமரா கைவண்ணத்தைக் கண்டு வியந்த பட இயக்குநர் கே ராம்நாத் – நான் விட்டதையெல்லாம் பிடிச்சு, பல காட்சிகளைநிறைவாக்கிவிட்டாயே, பலே.. –என்று பாராட்டினாராம்.   அடுத்து, பராசக்தி நடிகர்கள் தேர்வுக்காக மேக் அப் டெஸ்ட் நடைப்பெற்றது. சிவாஜி கணேசனுக்கு மேக் அப் செய்து பல கோணங்களில் அவரைப்படங்கள் எடுத்து, இவர் கதாநாயக வேடத்துக்குப் பொருத்தமானவர் என்று அப்பா ஏவிஎம் செட்டியாருக்குத் தன் முடிவைத் தெரிவித்தார்.செட்டியாருக்கு அரை மனசு, தம்பி தேறுவானா என்ற சந்தேகம். ஆனால் அப்பா, ‘இவரது கண்கள் ஒன்றே போதும், எந்த உணர்வையும்கண்களாலேயே வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் இவரிடம் இருக்கிறது. பளிச் பளிச் சென்று மாறும் முகபாவம், கணீரென்ற குரல், பிசிறில்லாத வசன உச்சரிப்பு எல்லாமே அபாரம்’ என்று அடித்துச் சொன்னார். தயக்கத்துடன் அதை ஏற்றுக் கொண்டார் செட்டியார். பிறகுபராசக்தியின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்த செட்டியார், அப்பாவிடம் நல்ல தேர்வு என்று சொல்லிப் பாராட்டினார்.   அந்தப் படத்தில் ‘பொருளே இல்லார்க்கு….’ என்றொரு பாடல் இடம் பெற்றிருக்கும். இரவுச் சூழல், சோகமான அந்தப் பாட்டுக்குப் பனி மூட்டமானபின்னணி பொருத்தமாக இருக்கும் என்று அப்பாவுக்குத் தோன்றியிருக்கிறது. அதை இயக்குநரும் ஏற்றுக் கொள்ள, உடனே நியுஜால் என்ற ஒருரசாயனப் பொருளை வரவழைத்தார் அப்பா. அது பாரபின் என்ற வேதியல் பொருளின் திரவ நிலை. அதை அப்படியே செட்டினுள் மேலே, கீழே,பக்கவாட்டில் என்று தெளித்துவிட்டு கேமராவை முடுக்கினார். அந்தப் பனிமூட்டப் பின்புலம், பாடலின் சோகத்தை மேலும் வலுவாக்கியது,பாராட்டுகளும் குவிந்தன.   ஒரே சமயத்தில் இரு குதிரைகளில் பயணம் செய்யும் வாய்ப்பும் அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது, – அந்த நாள் என்ற மர்மப் படத்தையும்,பேடர் கண்ணப்பா (கன்னடம்) என்ற பக்திப் படத்தையும் ஒரே சமயத்தில் ஒளிப்பதிவு செய்தார். காலையிலும், மாலையிலுமாக இரு படங்களையும்இருள், ஒளி என்ற நேர் எதிரான இரு ஒளியமைப்பைக் கொண்டு படம் பிடித்தார். ஜெமினி ஸ்டூடியோவின் பிரம்மாண்ட தயாரிப்பான சந்திரலேகாபடத்தில் இடம் பெற்ற முரசு டான்ஸை யாராலும் மறக்க முடியாது. அதைப் படமாக்க 4 கேமராக்களைப் பயன்படுத்தினார்கள். வெவ்வேறுகோணங்களில் பொருத்தப்பட்டு இயக்கப்பட்ட அந்த கேமராக்களில் ஒன்றை, அப்பாவும் இயக்கியிருக்கிறார். அதே போல் சர்வர் சுந்தரம் படத்தில்மகாபலிபுரத்தில் தன் தோழிகளுடன் கதாநாயகி பாடும் பாடலில் ஒரு காட்சி மட்டும் வித்தியாசமாக இருக்கும். இந்தக் கோணத்துக்காக ஐந்து ரதம்பகுதிக்கு அருகே மிகப் பெரிய பள்ளம் ஒன்றைத் தோண்டி, அதில் இறங்கி அப்பா படம் பிடித்தார் என்று சொன்ன டாக்டர் மகேந்திரன், குழந்தையும்தெய்வமும் படமாக்கப்பட்ட அதிசயத்தையும், மாருதி ராவின் மற்ற சாதனைகளையும் பட்டியலிட ஆரம்பித்தார்.   அந்தப் படத்தில் ஒரு நிலைக்கண்ணாடியில் பிம்பத்தை விழச் செய்து ஒரு குட்டி பத்மினி, இன்னொரு குட்டி பத்மினிக்கு கொடுக்கும் முத்தத்தால்,முதல் குட்டி பத்மினிக்குக் கன்னத்தில் குழி விழும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். அது மட்டுமல்ல இரு குட்டி பத்மினிகளும் கைகுலுக்கிக்கொள்ள முனையும் போது, ஒரு குட்டி பத்மினியின் கை நிழல் அடுத்த குட்டி பத்மினியின் கை மீது விழும் அற்புதமும் ரசிகர்களால்பாராட்டப்பட்டது. இதற்கு முக்கியமான பிலிமை தேவைக்கேற்ப மறைத்து (மாஸ்கிங்) ஒரு பகுதியை மட்டும் எக்ஸ்போஸ் செய்வது, செட்டில்ஒளிவிளக்குகள், அவ்வாறு மறைப்பதற்கு முன் எப்படி உதவ வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, அதே போன்றோ அல்லது இந்தக்கட்டத்துக்குத் தேவைப்படுவது போலவோ மாற்றி அமைப்பது என்று தன் வெற்றிக்குப் பாதை வகுத்துக் கொண்டிருக்கிறார்.   அன்பே வா படத்தில், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…என்ற பாடல் காட்சியில் எம் ஜி ஆரும், சரோஜாதேவியும் ராஜ உடையில், குதிரைகள்இழுக்கும் தேரில் பாடிக் கொண்டே செல்வார்கள். இருவருக்கும் ஆடம்பரமான உடையலங்காரம். இந்தக் காட்சிக்குப் பின்னணியும் இதே போல ரிச்ஆக இருப்பது தான் சரி என்று முடிவெடுத்தார் அப்பா. ராஜா ராணி, கனவுக் காட்சி… அவர்கள் விண்ணில், பால்வெளியில் பறந்தால், பொருத்தமாகஇருக்கும் என்று தீர்மானித்தார். உடனே அந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று அமெரிக்கா தூதரகத்தில் இருந்த நூல் நிலையத்துக்கு சென்றுவிண்வெளி சம்பந்தப்பட்ட படங்கள் அடங்கிய புத்தகங்களைப் பார்வையிட்டார். நூல் நிலைய அதிகாரியின் அனுமதியுடன் அந்தப் படங்களை, தன்கேமராவில் காப்பி செய்து கொண்டார். அதை பேக் ப்ரொஜக்ஷனாக ஓட விட்டு, அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினார். இந்தக் காட்சிபடமாக்கப்படும் போது, அந்த விண்வெளிக் காட்சியால் ஈர்க்கப்பட்ட எம் ஜி ஆர், ரொம்ப அற்புதமா இருக்கு, முதல்ல இந்தப் பின்னணிக் காட்சியைமுழுசா பார்த்துட்டு, அப்புறமா நான் நடிக்கிறேன் என்று சொன்னாராம்.   அதே கண்கள் வண்ணத் திரைப்படம்தான். ஆனால் அது ஒரு மர்மப் படம் என்பதால் பெரும்பாலான திக், திக் காட்சிகளை கருப்பு –வெள்ளைதோரணையில் ஒளிப்பதிவு செய்து, படம் பார்ப்பவர்கள் மனதில் அதிக திகிலை ஊட்டினார். மொத்தத்தில் ஒளியைத் தன் வசப்படுத்தியவர் என்றேஅப்பாவை சொல்லலாம். நடிகர்களின் சரும நிறத்துக்கு ஏற்ப ஒளியை அமைத்து அதனாலேயே தனிச் சிறப்பு பெற்றார். உதாரணத்துக்கு அம்மைத் தழும்புகள் கொண்ட நடிகர் நாகேஷைச் சொல்லலாம். சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷும், கே. ஆர். விஜயாவும் பேசிக் கொள்ளும் காட்சியில்இருவரையும் தனித் தனியாக க்ளோஸ் அப்பில் காட்டும் போதும் சரி, மிட் ஷாட்டில் இருவரையும் ஒன்றாகக் காட்டும்போதும் சரி, இருவர் மீதானஒளியும், அவரவர் சரும நிறத்துக்கு தகுந்தாற்போல் அமைக்கப்பட்டிருக்கும். கே பாலசந்தர், மேஜர் சந்திரகாந்த் படத்தை இயக்க முற்பட்டபோதுஒளிப்பதிவுக்கு அப்போது பிரபலமாக இருந்த நிமாய் கோஷை அணுகியிருக்கிறார். உடனே நிமாய் கோஷ், [...]

அசோக் மேத்தா

1981 இல் ‘36 செளரிங்கி லேன்’ எனும் படம் வெளிவந்த போது நான் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். அந்தப் படத்தை பார்த்த யாவரும் அதன் இயக்கத்தையும், நடிப்பையும் குறித்து சிலாகித்துப் பாராட்டினார்கள். ஆனால் ஒளிப்பதிவு மாணவர்களான நாங்கள் அந்தப் படத்தின் சர்வதேச அளவிலான மென்மையான காட்சிகளைக் குறித்து வியந்திருந்தோம். அதைப் படம் பிடித்தது ஒரு புதிய ஒளிப்பதிவாளர் என்று நாங்கள் அறிய வந்தபோது அவர் யார், எந்தக் [...]

அலோசியஸ் வின்சென்ட்

1950-களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் திரு. வின்செண்டின் சாதனைகள் உச்சத்துக்குச் சென்றது. திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுடன் அவர் இணைந்து, சுமை தாங்கி, நெஞ்சில் ஓர் ஆலயம், தேன் நிலவு மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படைப்புக்களுக்கு ஒளிப்பதிவாளராக செயலாற்றினார். அதோடு மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையிலும் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் ஜெயன் வின்சென்ட் மற்றும் அஜயன் வின்சென்ட். இருவருமே ஒளிப்பதிவாளர்கள்தாம்! திரை [...]